தமிழகத்தில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

  Newstm Desk   | Last Modified : 03 Jul, 2018 01:45 pm
heavy-rainfall-may-be-happened-in-tn-and-puducherry-cmc

சென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தென்மேற்குப் பருவமழை காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று சென்னையின் பல்வேறு இடங்களில் இரவு முழுவதும் மழை கொட்டித்தீர்த்தது. இதையடுத்து இன்றைய வானிலை நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், "வெப்பச்சலனம் மற்றும் மேற்குத்திசையில் ஏற்பட்ட மாறுபாடு காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை மாலை அல்லது இரவு நேரங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும். 

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருச்சி சமயபுரத்தில் 17 செமீ மழையும், காஞ்சிபுரத்தில் 10 செமீ மழையும் பதிவாகியுள்ளது. தென் மேற்கு பருவமழையை பொறுத்தவரை ஜூன் மாதத்தில் இயல்பு அளவு 46 மிமீ. தமிழகம் மற்றும் புதுவையில் ஜூன் 1 முதல்  30ம் தேதி வரை பெய்த மழையின் அளவு 49 மிமீ. எனவே இது இயல்பை விட 6% அதிகமாகும்" என தெரிவித்தார்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close