ஜெ.வின் கனவுத்திட்டமான மோனோ ரயில் திட்டம் நிறுத்தி வைப்பு!

  Newstm Desk   | Last Modified : 03 Jul, 2018 04:01 pm
monorail-project-stopped-temporarily-says-minister-thangamani

சென்னையில் தொடங்கப்பட இருந்த மோனோ ரயில் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கனவுத்திட்டங்களில் மிக முக்கியமானது மோனோ ரயில் திட்டம். சென்னையில் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டுவரப்பட்ட போது மோனோ ரயில் திட்டத்தையும்கொண்டு வர வேண்டும் என ஜெயலலிதா எண்ணினார். ஆனால் உலகின் பல்வேறு இடங்களில் செயல்பாட்டில் உள்ள மோனோ ரயில் திட்டம் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வெற்றி பெறவில்லை. இதனாலே அந்த திட்டத்தை கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டது. 

இந்த நிலையில் இன்று சட்டப்பேரவையில் மோனோ ரயில் திட்டம் குறித்து தி.மு.க எம்.எல்.ஏ மகேஷ் பொய்யாமொழி கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த மின்துறை அமைச்சர் தங்கமணி, "சென்னையில் தொடங்கப்பட இருந்த மோனோ ரயில் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் சாலைகள் மிகவும் குறுகலாக இருப்பதால் மோனோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவது கடினம். இத்திட்டத்திற்காக டெண்டர் எடுக்க கூட யாரும் முன்வரவில்லை. மேலும், மெட்ரோ ரயில் பணி நீட்டிப்பு செய்யப்படுவதன் காரணமாக மோனோ ரயிலின் அவசியம் குறைந்துள்ளது, எனவே மோனோ ரயில் திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் முழுமையாக கைவிடப்படவில்லை" என்றார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close