களமிறங்கும் நிர்மலா சீத்தாராமன்... மதுரையை கோட்டையாக்குமா பாஜக?

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 06 Jul, 2018 03:31 am
mp-election-madurai-from-kottai-to-bjp

மத்திய ராணுவ அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவதால் அங்கு தேர்தல் பணிகளில் முனைப்புகாட்டி வருகின்றனர் பாஜகவினர். 

கோவை, கன்னியாகுமரி, திருச்சி, சேலம், ராமநாதபுரம், தென் சென்னை, திருப்பூர் ஆகிய எட்டுத் தொகுதிகளை நாடாளுமன்றத் தேர்தலுக்காக குறி வைத்திருக்கிறது பாஜக. இந்த தொகுதிகளை குறி வைத்தாலும் மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் பாஜக போட்டியிடுவது உறுதி. அங்கு தேர்தல் வேலைகள் இப்போதே கலைகட்ட தொடங்கி விட்டன. கட்சியின் தேசிய, மாநில நிர்வாகிகளை அழைத்து கூட்டம்போடுவது, பூத் கமிட்டிகளை பலப்படுத்துவது, மத்திய அரசின் சாதனைகளை கிராமங்களுக்கு எடுத்துச்செல்வது என விறுவிறுப்பாக தேர்தல் வேலைகளை முன்னெடுத்துச் செல்கிறன்றனர் பாஜகவினர்.  மோடி அரசின் சாதனைகளை எடுத்துரைப்பதற்காக ஆறு லட்சம் ரூபாய் செலவில் , டிஜிட்டல் போர்டு வைத்த வேன் ஒன்றையும் தயார் செய்துவிட்டார்கள். இந்த வேன், மதுரை மாவட்டம் முழுக்க கிராமம்தோறும் சென்று மோடியின் சாதனையை பறைசாற்ற இருக்கிறது.

மதுரை தொகுதியை பாஜக முக்கியமாக கருதக் காரணம் என்ன? ‘மதுரை நாடாளுமன்றத் தொகுதியில், பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனைப் போட்டியிட வைக்க ஏற்பாடுகள் நடக்கின்றன. அதற்காகத்தான் இப்போதே தேர்தல் பணிகளை ஜரூராக ஆரம்பித்து விட்டார்கள்.  அதற்காகத்தான் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அறிவிப்பை இப்போதே வெளியிட்டார்களாம். அதே போல நைபர் என்றழைக்கப்படும் மருந்து தயாரிப்பு ஆராய்ச்சி கல்லூரியையும் இங்கு அமைக்க உள்ளார்கள். அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது. இந்தக் கல்லூரிக்காக மதுரை அருகில் உள்ள இடையபட்டி கிராமத்தில் 100 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. தற்போதைய மத்திய ராணுவ அமைச்சராக இருக்கும் நிர்மலா சீத்தாராமன் தமிழகத்தை சேர்ந்தவர். மதுரையில் பிறந்தவர். பிராமணர் வகுப்பை சேர்ந்த அவருக்கு, மதுரையில் பெரும்பான்மையாக வசிக்கும் செளராஷ்டிரா இன மக்களின் வாக்குகள் கிடைக்கும் என நம்புகிறது பாஜக தலைமை. ஆகையால் இங்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாக கூறப்படுவதால் மதுரை தொகுதியில் இப்போதே களத்தில் இறங்கி இருக்கிறது பாஜக.

மதுரையையும் சேர்த்து குறைந்த பட்சம் நாடாளுமன்றத் தேர்தலில் 5 இடங்களிலாவது வெற்றி பெற்றே ஆக வேண்டும் என திட்டமிட்டு இருக்கிறது பாஜக. இதற்கான ஆலோசனையை மேற்கொள்ள ஜூலை 9-ம் தேதி பி.ஜே.பி-யின் தேசியத் தலைவர் அமித்ஷா தமிழகம் வர இருக்கிறார்.  அப்போது அடுத்தடுத்த தொகுகளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடரும் எனக் கூறுகிறார்கள் தாமரை கட்சியினர். 
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close