சிறப்புப்பிரிவு மாணவர்களுக்கான பொறியியல் கலந்தாய்வு தொடங்கியது!

  Newstm Desk   | Last Modified : 06 Jul, 2018 05:24 pm
engineering-counselling-starts-today-in-anna-university

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில், சிறப்புப்பிரிவு மாணவர்களுக்கான பொறியியல் கலந்தாய்வு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.  

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் பொறியியல் படிப்புக்கு  இந்தாண்டு 1,59,631 பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு ஜூன் 8ம் தேதி முதல் 14ம் தேதி வரை நடைபெற்றது. இதையடுத்து ரேண்டம் எண், தர வரிசை பட்டியல் ஆகியன வெளியிடப்பட்டன. தொடர்ந்து சிறப்புப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு இன்று தொடங்கியுள்ளது. 3 நாள் நடைபெறும் இந்த கலந்தாய்வின் முதல் நாளான இன்று, காலை 9.15 மணியளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு என 7,175 இடங்கள் உள்ள நிலையில், 320 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் 167 பேர் மட்டுமே கலந்தாய்வில் பங்கேற்க தகுதிபெற்றுள்ளனர். இவர்களுக்கு இன்று(ஜூலை 6) 4 கட்டங்களாக கலந்தாய்வு நடைபெறுகிறது. 

நாளை(ஜூலை 7),  முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கும், நாளை மறுநாள்(ஜூலை 8) விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கும்  கலந்தாய்வு நடைபெற உள்ளது. ஆன்லைனில் கலந்தாய்வு நடைபெறும் என கூறப்பட்ட நிலையில், சிறப்புப்பிரிவு மாணவர்கள் குறைந்த அளவில் உள்ளதால் இவர்களுக்கு நேரடியாக அண்ணா பல்கலைக்கழகத்தில் கலந்தாய்வு நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. 

பொதுப்பிரிவு மாணவர்களுக்கு அறிவிப்பின்படி, ஆன்லைனில் கலந்தாய்வு நடைபெறும்.  இதற்காக தமிழகத்தில் ஏற்படுத்தப்பட்ட 42 மையங்களில் செண்டு மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்கலாம். ஜூலை10ஆம் தேதிக்குப் பிறகு பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close