மு.க.அழகிரிக்கு மத்திய அமைச்சர் பதவி... வளைக்கும் பாஜக!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 07 Jul, 2018 02:35 am

m-k-azhagiri-is-the-central-minister-s-post-bending-bjp

திமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ள மு.க.அழகிரி அரசியலில் இருந்து சிலகாலம் ஒதுங்கி இருந்தார். இந்நிலையில், மீண்டும் அவரது ஆதரவாளர்களின் இல்ல நிகழ்ச்சிகளில் பங்கெடுத்து வருகிறார். மீண்டும் ஸ்டாலின் தலைமையை கடுமையாக விமர்சிப்பதை தொடர்ந்து வருவதால், திமுகவில் மீண்டும் இணைய வாய்ப்பில்லை என்றே கருதப்படுகிறது. 

ஆகையால் அவரை எப்படியும் தங்களது கட்சியில் இணைத்துவிட வேண்டும் என பாஜக தலைமை விரும்புவதாகக் கூறப்படுகிறது. அழகிரி செல்லும் விழாக்களுக்கு பாஜகவை சேர்ந்த சிலர் தங்களது கட்சிக்கொடியை எடுத்துச் சென்று கூட்டத்தை அதிகரித்து வருகின்றனர். தொண்டர்கள் ஒருபுறம் இப்படி அழகிரி செல்லும் நிகழ்ச்சிகளுக்கு கூட்டமாக சென்றாலும் மறுபுறம் பாஜக தலைமை மு.க.அழகிரியிடம் கட்சியில் இணைய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. 

மு.க.அழகிரியை இணைத்துவிட்டால் மதுரை பகுதியில் பாஜக வெற்றி உறுதி எனக் கணக்கிட்டே, நாடாளுமன்றத்தேர்தலில் களமிறங்க முதல் சாய்ஸாக இந்தத் தொகுதியை தேர்வு செய்துள்ளனர். அழகிரியின் துணிச்சலில்தான், மத்திய ராணுவ அமைச்சர் நிர்மலா சீத்தாராமனை மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் களமிறக்கத் திட்டமிட்டுள்ளது பாஜக. அவர் மதுரையில் பிறந்தவர் என்பதோடு மு.க.அழகிரி பாஜகவில் இணைந்துவிட்டால் வெற்றி நிச்சயம் எனக் கணக்குப்போடுகின்றனர்.  

பாஜகவில் சேர்ந்தால் மு.க.அழகிரிக்கு என்ன லாபம்..?
கட்சியில் இணைந்தால், தேர்தலில் நேரடியாக போட்டியிடாமல், மாநிலங்களவை உறுப்பினராக்கி மத்திய அமைச்சர் பதவி தருவதாக மு.க.அழகிரியிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள் பாஜக மேலிடத் தலைவர்கள். அதேபோல, காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக் காலத்தில் மத்திய உரம் மற்றும் ரசாயனத்துறை அமைச்சராக மு.க.அழகிரி இருந்தார். அப்போது, நைபர் என்றழைக்கப்படும் மருந்து தயாரிப்பு ஆராய்ச்சி கல்லூரி மதுரையில் அமைக்கப்படும் என மு.க.அழகிரி அப்போது அறிவித்து இருந்தார்.  ஆனால், எந்த வேலையும் நடக்கவில்லை. அப்படியே கிடப்பில் போட்டு விட்டார்கள். அந்த அறிவிப்பை செயல்படுத்த நைபர்  கல்லூரிக்காக மதுரை அருகில் உள்ள இடையபட்டி கிராமத்தில் 100 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை இப்போது  கையிலெடுத்தது மு.க.அழகிரியின் மனதை குளிவிக்க எடுத்த நடவடிக்கையாக கூறப்படுகிறது. தாங்கள் அறிவித்த திட்டத்தை நிறைவேற்றுவதால் உங்களுக்கான மரியாதை இன்னும் கூடும்’ என பல விஷயங்களைக் கூறி பச்சை மரத்தில் ஆனி அடிப்பதைப்போல அழகிரியின் மனதை கரைத்து வருகிறார்கள் பாஜகவினர்.

ஆனால், அழகிரி தன் தரப்பில் இருந்து எந்த பதிலையும் கூறவில்லை என்கிறார்கள். தனது தந்தை இருக்கும்போதே வேறு கட்சியில் இணைந்தால் அது அவருக்கு அவப்பெயரை ஏற்படுத்தி விடும். சில மாதங்கள் காத்திருக்கலாம் எனக் கருதுவதாக கூறப்படுகிறது. ஆனாலும், ரஜினி கட்சியின் மீது மு.க.அழகிரிக்கு விருப்பம் இருப்பதாகக் கூறுகிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.! 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close