நாடு முழுவதும் ஒரே தேர்தல் என்பது ஒத்து வராது: புதுச்சேரி முதல்வர்

  Newstm Desk   | Last Modified : 07 Jul, 2018 02:26 pm

one-state-one-election-policy-is-not-correct-says-puducheery-cm-narayanasamy

நாடு முழுவதும் சட்டமன்றம் மற்றும் மக்களவைக்கு ஒரே தேர்தல் நடத்துவது என்பது ஒத்து வராது என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

டெல்லியை போன்றே புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கும், முதல்வர் நாராயணசாமிக்கும் மோதல் இருந்த வருகிறது. இந்த நிலையில், உச்சநீதிமன்ற தீர்ப்பை கிரண்பேடி மதித்து நடக்காவிட்டால் நீதிமன்றத்தை அணுக நேரிடும் என நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

மேலும், நாடு முழுவதும் ஒரே தேர்தல் குறித்து, "எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பு இன்றி முக்கிய திட்டங்களை மத்திய அரசு நிறைவேற்ற முடியாது. நாடு முழுவதும் சட்டமன்றம், மக்களவைக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது என்பது ஒத்துவராது. இது தொடர்பாக மத்திய சட்டத்துறை அமைச்சகம், உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளேன்" என்றும் கூறியுள்ளார்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close