என்னாது, சிம்புவுமா..? போதும்... விட்டுடுங்க சாமிகளா...

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 08 Jul, 2018 02:18 am

simbu-enters-politics

சிம்புவும், வெங்கட் பிரபுவும் இணைந்து ஒரு புதிய படத்தை உருவாக்க இருக்கிறார்கள். வழக்கமாக காமெடி மசாலா கிண்டும் வெங்கட்பிரபு, இந்த முறை அரசியல் துவையல் அரைக்கப் போகிறாராம்.“சிம்பு காவேரி விவகாரத்தில் பொங்கிய பின்பு அவரையும் அரசியல் வளைத்துக் கொண்டது. வெங்கட்பிரபுவும் பா.ரஞ்சித் ஆகிவிட்டார்  என்கிறது கோடம்பாக்கம். (வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர்தான் பா.ரஞ்சித் ) இது சிம்புவின் சினிமா அரசியல்...

அப்புறம்..? நிஜ அரசியலிலும் இறங்கப்போகிறாராம் சிம்பு..! அட, இதென்ன ‘’காலா’க்கொடுமை. ரஜினியும், கமலும் தீவிர அரசியலில் களம் இறங்கி இருப்பதையும், கட்சித் துவக்கி இருப்பதையும் கண்டு, இயக்குநர் டி.ராஜேந்தர் தனது கட்சியை வலுப்படுத்த தீவிரம் காட்டி வருகிறார். தான் ஏற்கனவே நடத்தி வரும் கட்சியை வளர்த்தெடுக்கும் பொறுப்பை தனது மகன் சிம்புவிடம் கொடுக்க விருப்பதாகத் தகவல்.

இதற்காக  சிம்புவிடம், ராஜேந்தர் தொடர்ந்து நச்சரித்து வருகிறார் எனக் கூறப்படுகிறது.  இதற்கு  சிம்பு மட்டும்  சம்மதித்து விட்டால் கட்சியை ஒப்படைக்கத் தயாராக இருப்பதாக கூறுகிறார்கள்.  சிம்புவுக்கும் தீவிர அரசியலில் ஈடுபடும் எண்ணம் இருப்பதால், அப்பா ராஜேந்தர் எண்ணப்படியே, தீவிர அரசியலில் எந்த நேரமும் களம் இறங்கலாம் என்கிறனர் அவர்களுக்கு நெருக்கமானவர்கள். 

இதென்னடா அரசியலுக்கு வரப்போகும் சோதனை..!

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close