என்னை ஏமாற்றிவிட்டார் ஓ.பி.எஸ்- ஜெ.தீபா பேட்டி

  ஐஸ்வர்யா   | Last Modified : 08 Jul, 2018 06:01 pm

ops-has-cheated-me-says-j-deepa

அரசியல் ரீதியாக என்னை ஏமாற்றிவிட்டதாக எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை பொது செயலாளர் ஜெ.தீபா குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அ.தி.மு.க இரண்டாக உடைந்தது. சசிகலா தலைமையில் ஓரணியாகவும் ஓ.பி.எஸ் தலைமையில் மற்றொரு அணியாகவும் பிரிந்தது. அப்போது ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் எம்.ஜி.ஆர் அம்மா பேரவை என்ற அமைப்பை தொடங்கினார். அவருக்கு சில தொண்டர்கள் ஆதரவளித்தனர்.

ஓ.பி.எஸ் தர்மயுத்தம் நடத்திய நேரத்தில், ஒ.பி.எஸ் வீட்டுக்கே சென்றார் தீபா. ஓ.பி.எஸ் குடும்பத்தினர் ஆரத்தி எடுத்து தீபாவை வரவேற்றனர். அதன்பிறகு, தீபாவின் நிபந்தனைகளுக்கு பயந்து ஓ.பி.எஸ் ஓட்டம் எடுத்தார். ஒருவழியாக சசிகலா குடும்பத்தை எடப்பாடி பழனிசாமி ஒதுக்கிவைத்தார். ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் ஒன்றினைத்தனர். அதன்பிறகு, தீபா எங்கு இருக்கிறார் என்பதே தெரியாத அளவுக்கு சென்றது. அவ்வப்போது செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்து நானும் இருக்கிறேன் என்ற அளவில் பேசுவார் தீபா.

இந்நிலையில் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ. தீபா,  “அரசியல் ரீதியாக என்னை ஏமாற்றிவிட்டு என்னிடம் இருந்த தொண்டர்கள் சிலரை ஓ.பி.எஸ் தன் பக்கம் இழுத்து கொண்டார். அதன் பிறகு தான் ஓ.பி.எஸ்க்கு செல்வாக்கு உயர்ந்தது. ஐந்தாண்டுகள் இந்த அரசு நீடிக்குமானால் தமிழகத்தில் மக்கள் வாழ முடியாத நிலை ஏற்படும். மத்தியிலும், மாநிலத்திலும் சர்வாதிகார ஆட்சி தான் நடந்து கொண்டிருக்கிறது. நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல் நடக்குமா? என்பதே சந்தேகம்தான்” என தெரிவித்தார்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close