எதிர்கட்சிகளை ஒன்று திரட்டும் மு.க.ஸ்டாலின்! வெற்றிபெறுவாரா?

  Newstm Desk   | Last Modified : 10 Jul, 2018 12:15 am

stalin-invites-political-party-leaders-to-attend-state-autonomy-meet

தி.மு.க நடத்தும் மாநில சுயாட்சி கூட்டத்தில் கலந்து கொள்ள அர்விந்த் கெஜ்ரிவால் உட்பட பல அரசியல் கட்சி தலைவர்களுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். 

மாநில சுயாட்சியை வலியுறுத்தும் வகையில் தி.மு.க சார்பில் மாநாடு நடைபெற உள்ளது. வரும் ஆகஸ்டு மாதம் 30ம் தேதி  இந்த மாநாட்டை நடத்த தி.மு.க திட்டமிட்டுள்ளது. 

இந்த மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுத்து அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம்சிங் யாதவ், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார். அரவிந்த் கெஜ்ரிவாலை நேரில் சந்தித்த திருச்சி சிவா எம்.பி, இதற்கான அழைப்பிதழை அளித்தார். இதேபோல் ஒவ்வொரு கட்சித் தலைவர்களையும் சந்தித்து அழைப்பிதழ் வழங்கப்பட்டு வருகிறது.

சந்திரபாபு நாயுடு, மம்தா பானர்ஜி, லாலு பிரசாத் என்று ஆளாளுக்கு எதிர்க்கட்சிகளை ஒர் அணியில் திரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், யாருடைய தலைமையை யார் ஏற்பது என்று ஆளாளுக்கு நாட்டாமை செய்து வருகின்றனர். இந்த சூழலில், எதிர்க்கட்சிகள் அனைத்தையும் ஒன்று சேர்க்கும் வியூகத்தை ஸ்டாலின் அமைத்திருக்கிறார். தமிழக கட்சிகளையே ஓராணியில் திரட்ட முடியாத தி.மு.க எப்படி தேசிய கட்சிகளை ஒன்று சேர்க்கும் என்று எதிர்க்கட்சிகள் கேலி பேசுகின்றனர்.

நீட் தேர்வு, கல்வி சீர்திருத்தம் என மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு கொண்டு வரும் திட்டங்கள் மாநில அரசின் அதிகாரத்தைக் குறைப்பது போல இருப்பதாக குற்றம்சாட்டும் தி.மு.க, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த மாநாட்டை நடத்துகிறது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close