அசத்தும் பாஜக... மோடியின் வெற்றிக்காக களமிறங்கும் ’பாகுபலி’ பிரபாஸ்!?

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 10 Jul, 2018 07:15 pm

prabhas-to-turn-baahubali-for-pm-modi-s-bjp-in-2019-elections

புவனேஸ்வர்: பிரபல தெலுங்கு நடிகரும், பாகுபலி நாயகனுமான பிரபாஸ் வரும் நாடாளுமன்றத்தேர்தலில் பாஜகவுக்காக பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இயக்குநர் எஸ்.எஸ்.ராஜம்வுலி இயக்கத்தில் வெளிவந்த பாகுபலி படத்தின் இரு பாகங்களும், வசூலிலும், பிரம்மாண்டத்திலும் இந்திய சினிமாவை உலகமே வியந்து பார்க்கக்கூடிய அளவிற்கு உயர்த்தியது. இந்தப்படத்தில் நடித்ததன் மூலம் இந்தியா முழுவதும் புகழ் பெற்ற நடிகராக உருவெடுத்தார் தெலுங்கு நடிகரான பிரபாஸ். 

இந்த நிலையில் பிரபாஸ், வரும் நாடாளுமன்றத்தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடப்பட உள்ளதாகவும் அதற்காக பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. பிரபாஸின் உறவினரான  நடிகர் கிருஷ்ணம் ராஜூ பாஜகவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். அவர் ஆந்திரபிரதேசம், காக்கிநாடா தொகுதியில் இம்முறை போட்டியிடப்போவதாகவும், அவர் மூலம் பிரபாஸிடம் பாஜக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்பட்டது. பிரபாஸ் அதற்கு தயாராக இருக்கும் பட்சத்தில் தென்னிந்தியா முழுவதும் பாஜகவுக்கு பலன் கிடைக்கும் என பாஜகவினர் நம்பிக்கையுடன் இருந்தனர். 

                                  பாஜகவை சேர்ந்த உறவினர் கிருஷ்ணம் ராஜூவுடன் பிரபாஸ்

ஆனால், பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய இருப்பதாக கூறப்பட்ட தகவல் வதந்தி என பிரபாஸ் தரப்பினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘பிரபாஸ் தற்போது சில படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தற்போது அவரது கவனம் முழுவதும் சினிமாதுறை மீது மட்டுமே உள்ளது. பாகுபலி படங்களுக்கு பிறகு மிகவும் கவனத்தோடு சிறந்த படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இந்த நிலையில் அரசியலில் ஈடுபடப்போவதாக வரும் தகவல்கள் அவரது வளர்ச்சிக்கு பாதகமாகி விடக்கூடாது. அவரது உறவினர் நடிகர் கிருஷ்ணம் ராஜூ பாஜகவில் இருப்பதால் இப்படி ஒரு வதந்தி கிளம்பி இருக்கும்’’ என உறுதியாக மறுத்துளனர். 

பிரபாஸ் தற்போது விண்வெளிப்படமான சாஹூ படத்தில் நடித்து வருகிறார். அடுத்து ஷரத்தா கபூருடன் ’மிஸ்டர்.பெர்பெக்ட்’ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். 
 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close