’சிறுநீர் பாசனம் - நான் சொன்னதுதான் சரி’ - ஹெச்.ராஜா ட்வீட்

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 10 Jul, 2018 07:14 pm
what-i-said-was-right-h-raja-twitt

அமித் ஷா மேடையில் சொட்டு நீர் பாசனத்தை சிறுநீர் பாசனம் என தான் மொழி பெயர்த்தது சரிதான் என பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச்.ராஜா விளக்கமளித்துள்ளார். 

சமீபத்தில் சென்னை வந்த அமித்ஷா பா.ஜ.க தொண்டர்கள் முன் ஹிந்தியில் பேச, ஹெச்.ராஜா அதை தமிழில் மொழி பெயர்த்து கூறினார். அப்போது, மைக்ரோ இர்ரிகேஷன் திட்டத்திற்கு ரூ.332 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என அமித்ஷா பேசினார். உண்மையில் சொட்டுநீர்ப் பாசனம் என்றுதான் அதை ராஜா மொழி பெயர்த்திருக்க வேண்டும். ஆனால் 'சிறுநீர் பாசனம்' என்று மொழி பெயர்த்தார். இதனை கேட்டுக்கொண்டிருந்த பா.ஜ.க நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

இது நேற்று முதல் சமூக வலைத்தளங்களில் விவாதப்பொருளாகி வந்தது. இந்நிலையில், தனது டிவிட்டர் பக்கதில், மைக்ரோ என்ற சொல்லுக்கு சிறிய, நுண்ணிய, நுண் என்றெல்லாம் அர்த்தம் உண்டு என்று கூறுவது போல் ஒரு டிவிட்டை பதிவு செய்துள்ளார். மைக்ரோ என்கிற வார்த்தைக்கு சிறிய, நுண்ணிய என்ற அர்த்தம் சரிதான்’’ எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் தமிழ்நாடு ஊழல் நிறைந்த மாநிலம்னு அமித் ஷா சொல்லியிருக்கிறாரே.. எனக்கேட்டனர். இதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், ‘அமித் ஷா இந்தியில பேசியிருக்காரு.. யாருக்கும் அது புரியாது. அவர் பேசினதை ட்ரான்ஸ்லேட் பண்ணது ஹெச்.ராஜா. அமித்ஷா மைக்ரோ இரிகேஷன்னா இவர் சிறுநீர் பாசனம்னு ட்ரான்ஸ்லேட் பண்றாரு. அதுபோல, அமித் ஷா நம்மப் பத்தி ஏதாவது நல்லதாத்தான் சொல்லியிருப்பாரு. இவருதான் மாத்தி சொல்லியிருப்பார்ங்கிறது என் நம்பிக்கை’’ எனத் தெரிவித்தார்.  இன்று இந்த இரண்டும் வைரலாகி வருகின்றன.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
t1
Advertisement:
[X] Close