ராகுல் கருத்தை ஏற்று ராஜிவ் கொலையாளிகளை மத்திய அரசு விடுவிக்கலாம்: கடம்பூர் ராஜு

  Newstm Desk   | Last Modified : 11 Jul, 2018 01:49 pm

kadambur-raju-says-about-rahul-gandhi-s-opinion

சென்னை: ராகுல் காந்தியின் கருத்தை மத்திய அரசு ஏற்றால், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிக்கலாம் என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். 

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 27 ஆண்டுகளாக சிறைத்தண்டனை பெற்று வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய மிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது. அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என மத்திய அரசிடம் எதிர்க்கட்சிகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

இதையடுத்து, திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை நேற்று(ஜூலை 10) சந்தித்தார். இந்த சந்திப்பின் போது பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுவிப்பதில் தனக்கு எந்த ஆட்சேபமும் இல்லை என ராகுல் கூறியதாக ரஞ்சித் தெரிவித்தார். 

இந்நிலையில், அமைச்சர் கடம்பூர் ராஜூ இன்று செய்தியாளர்களின் சந்திப்பின் போது பா.ரஞ்சித் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அமைச்சர், "பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுவிப்பதில் ராகுல் காந்திக்கு ஆட்சேபம் இல்லை என்று கூறியது அவரது சொந்த முடிவு. ராகுல் காந்தியின் கூறியதை மத்திய அரசு ஏற்றால் அவர்களை விடுவிக்கலாம். பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுவிப்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. இந்த கோரிக்கையை மத்திய அரசு ஏற்கும் என்று நம்புகிறேன்" என்றார்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close