தொழில் தொடங்க சிறந்த மாநிலம் தமிழகம் தான்...அடித்துக்கூறும் ஜெயக்குமார்!

  Newstm Desk   | Last Modified : 11 Jul, 2018 01:50 pm

tamilnadu-is-the-first-place-to-start-the-industry-says-minister-jayakumar

சென்னை: இந்திய அளவில் தொழில் தொடங்குவதற்கு தமிழகம் தான் முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை எழும்பூரில் வீரன் அழகுமுத்துகோன் சிலைக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் தொடர்ச்சியாக அமைச்சர்கள் ஜெயக்குமார், மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.

இதையடுத்து அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "தமிழகத்தில் தொழில் வளர்ச்சி இல்லை என தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது. இது குறித்து புள்ளிவிவரம் வெளியிட்ட அமைப்பு மத்திய அரசால் அங்கீகாரம் பெற்ற அமைப்பு அல்ல. தொழில் செய்வதற்கான உகந்த மாநிலம் என்ற பெயரை தமிழகம் தொடர்ந்து தக்க வைத்து கொண்டுள்ளது. இந்திய அளவில் தொழில் செய்ய சிறந்த மாநிலம் தமிழகம் தான். 2019ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் அதிகமான தொழில் முனைவோர்கள் கலந்து கொள்வார்கள் " என்றார்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close