நிலக்கரி முறைகேடு: தமிழக அரசுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை!

  Newstm Desk   | Last Modified : 11 Jul, 2018 04:42 pm

coal-import-scam-dmk-stalin-warned-to-tn-govt

தமிழகத்தில் நிலக்கரி இறக்குமதி செய்ததில் நடந்த முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும், இல்லையெனில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "தமிழகத்தில் தரமில்லாத நிலக்கரியை இறக்குமதி செய்ததில் மட்டும் 607 கோடி ரூபாய் நஷ்டம். 2013 முதல் பிப்ரவரி 2016 வரை நிலக்கரி இறக்குமதி செய்ததில் மட்டும் 1599.81 கோடி ரூபாய் அரசுக்கு நஷ்டம் என இந்த “கோமாளித்தனமான” ஆட்சியின் அவலங்கள் அனைத்தும் #CAGReport மூலம் வெளிவந்து விட்டது.

பேரதிர்ச்சி அளிக்கும் இந்த சி.ஏ.ஜி அறிக்கையின்படி தரமற்ற நிலக்கரியை இறக்குமதி செய்து 1500கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டம் ஏற்படுத்தியதில் உள்ள முறைகேடுகள் குறித்து சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும், இல்லையென்றால் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்" என குறிப்பிட்டுள்ளார். 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close