தேர்தல் ஆணையத்தில் அங்கீகாரம்: கட்சிக்கொடியேற்றினார் கமல்ஹாசன்!

  Newstm Desk   | Last Modified : 12 Jul, 2018 01:39 pm

kamal-s-makkal-needhi-maiam-is-recognised-as-a-party-in-election-commission

மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு சமீபத்தில் தலைமை தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியுள்ளதால், இன்று கட்சியின் தலைமை அலுவலகத்தில் கமல்ஹாசன் கட்சிக்கொடியினை ஏற்றினார். 

நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு அங்கீகாரம் அளிக்கக்கோரி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து தேர்தல் ஆணையம் அக்கட்சிக்கு அங்கீகாரம் அளித்துள்ளதாக கமல்ஹாசன் இன்று செய்தி வெளியிட்டுள்ளார். கட்சி அங்கீகாரம் பெற்ற பிறகு முதல் முறையாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் கமல்ஹாசன் கொடி ஏற்றினார். மேலும் கட்சியின் உறுப்பினர்கள் குறித்த அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார். 

அதன்படி, மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத்தலைவராக கு.ஞானசம்பந்தன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பொதுச்செயலாளராக அருணாச்சலம், பொருளாளராக சுரேஷ், செயற்குழு உறுப்பினர்களாக ஸ்ரீபிரியா, கமீலா நாசர், மெளரியா, பாரதி கிருஷ்ணகுமார், குமரவேல், சவுரிராஜன், தங்கவேலு, மூர்த்தி உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close