போக்குவரத்துக்கு இடையூறு: மன்னிப்பு கோரினார் கமல்ஹாசன்!

  Newstm Desk   | Last Modified : 12 Jul, 2018 12:33 pm

kamal-says-apologized-for-causing-traffic-in-chennai-alwarpet

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனது நிகழ்ச்சியால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதற்காக கமல்ஹாசன் மன்னிப்பு கோரினார்.

மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு தலைமை தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியுள்ளதால், இன்று சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் கமல்ஹாசன் கட்சிக்கொடியினை ஏற்றினார். மேலும் கட்சியின் உறுப்பினர்கள் குறித்த அறிவிப்பையும் வெளியிட்டார். 

கமல்ஹாசனின் நிகழ்ச்சியால் ஆழ்வார்பேட்டை சிக்னல் அருகே கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. வாகனங்கள் செல்ல முடியாமல் ஸ்தம்பித்தன. இதனையறிந்த கமல்ஹாசன், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதற்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close