ரஜினி மன்ற மாநில செயலாளர் ராஜூ மகாலிங்கம் நீக்கம் உண்மையா..?!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 12 Jul, 2018 02:15 pm
rajini-mandram-secretary-of-state-mahalingam-suspend-is-it-true

பணத்தை கையாடல் செய்ததாக எழுந்த  குற்றச்சாட்டால் ரஜினி மக்கள் மன்ற மாநில செயலாளர்  பதவியிலிருந்து ராஜு மகாலிங்கம் நீக்கப்பட்டதாக வந்த தகவல் வதந்தி என அம்மன்றத்தின் மற்றொரு பொறுப்பாளர் வி.எம்.சுதாகர் தெரிவித்துள்ளார். 

ரஜினி மக்கள் மன்றத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக புகார் எழுந்தது ரஜினியின் கவனத்திற்கு வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து மன்றப் பணிகளை நிறுத்தி வைக்குமாறு வெளிமாநிலத்தில் ஷூட்டிங்கில் இருந்த ரஜினிகாந்த் உத்தரவிட்டு இருந்ததாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் நேற்று சென்னை வந்த ரஜினிகாந்த் இந்த விவகாரத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பார் என்றும், சில நிர்வாகிகளின் பதவியை பறிப்பார் என்றும் கூறப்பட்டது. குறிப்பாக ராஜூ மகாலிங்கத்தின் பதவி பறிக்கப்படும் என்று கூறப்பட்டது. மேல்மட்ட நிர்வாகிகளை பற்றிய தகவல்களை அறிய ரகசிய குழு ஒன்றை அமைத்து அவர்களின் பின்புலம் பற்றிய தகவல்களை ரஜினி திரட்டியிருக்கிறார். அதில், ராஜு மகாலிங்கம், தி.மு.க-வின்  நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் டி.ஆர்.பாலுவின் மகனும் தி.மு.க எம்.எல்.ஏ-வுமான டி.ஆர்.பி.ராஜாவின் நெருங்கிய நண்பராக இருப்பது தெரிய வந்துள்ளது என்றும் கூறப்பட்டது.
 

தொடக்கத்தில் டி.ஆர்.பாலு குடும்பம் நடத்தி வந்த கப்பல் நிறுவனத்தில் முக்கியப் பொறுப்புகளை ராஜூ மகாலிங்கம் நிர்வகித்து வந்துள்ளார். இப்போதும் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசனுடனும் ராஜூ மகாலிங்கம் பழக்கத்தில் இருந்து வருவதும் தெரிய வந்துள்ளது. ரஜினி மன்றத்தில் நடக்கும் ரகசிய விவரங்கள்கூட தி.மு.க வட்டாரத்துக்குப் போவதாக சில ஆதாரங்கள் தலைவருக்கு கிடைத்துள்ளன. அதனால்தான், ராகவேந்திரா மண்டபத்தில் உள்ள அலுவலகத்தை ரஜினி உடனடியாக மூடச்சொல்லி உத்தரவிட்டு இருக்கிறார். எனவே ராஜூ மகாலிங்கம் மன்றத்தில் இருந்து அதிரடியாக களையெடுக்கப்படலாம்’’ எனக் கூறப்பட்டது. 

இதனையடுத்து சென்னை வந்த ரஜினி, ராஜூ மகாலிங்கம் மன்றப்பணத்தை கையாடல் செய்த விபரத்தையும் அறிந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில்,  தன்னை நேரில்  சந்திக்க வேண்டாம் என ராஜு மகாலிங்கத்தை ரஜினிகாந்த்  எச்சரித்துள்ளதாகவும், அவரை பதவியில் இருந்து நீக்கி விட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. இதனால் ரசிகர்கள், பத்திரிகையாளர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக ரஜினி மன்ற நிர்வாகிகளை பலரும் தொடர்புகொண்டு விசாரித்து வருகின்றனர். இதைத் தொடர்ந்து, ரஜினி மக்கள் மன்றப்பொறுப்பாளர் வி.எம்.சுதாகரன் ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், ‘சமூக வலைத்தளங்களில் ரஜினி மக்கள் மன்றத்திலிருந்து திரு . ராஜு மஹாலிங்கம் அவர்களை நீக்கி விட்டதாக செய்தி பரவிவருகிறது, இந்த செய்தி உண்மைக்கு புறம்பானதால் யாரும் நம்பவேண்டாம்’ எனக் கேட்டுக்கொண்டுள்ளார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close