சிலைகடத்தல் வழக்கு சிபிஐ-க்கு மாற்றியதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல்!

  Newstm Desk   | Last Modified : 03 Aug, 2018 11:03 am
idol-smuggling-case-handed-over-to-cbi-traffic-ramasamy-files-case-against-tn-go

சிலைகடத்தல் வழக்குகளை சிபிஐ-க்கு மாற்றி தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு எதிராக ட்ராபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். 

தமிழகத்தில் சிலைகடத்தல் தொடர்பான வழக்குகள் அனைத்தையும் பொன்.மாணிக்கவேல் தலைமையிலான குழு விசாரித்து வந்தது. ஆனால் இந்த விவகாரத்தில் பொன். மாணிக்கவேல் சிறப்பாக செயல்படவில்லை என கூறி வழக்குகள் அனைத்தும்  சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படுகிறது என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்ற வழக்கின் விசாரணையில் தெரிவித்தது. 

அதே நேரத்தில் பொன்.மாணிக்கவேல் தரப்பு, " சிலைகடத்தல் வழக்குகள் தொடர்பாக நீதிமன்றம் கேட்கும் கேள்விகளுக்கு நான் பதிலளிக்கிறேன். அரசுக்கு விளக்கம் அளிக்க வேண்டிய கட்டாயமில்லை. அரசுக்கு  தகவல்களை அளித்தால் பாதுகாப்பாக வைக்கப்பட்ட தகவல்கள் கசிய வாய்ப்புள்ளது" என விளக்கம் கொடுக்கப்பட்டது. நீதிமன்ற உத்தரவு வரும் முன்னரே தமிழக அரசு  சிலைகடத்தல் தொடர்பான வழக்குகள் அனைத்தையும் சிபிஐ-க்கு மாற்றி அரசாணையை பிறப்பித்துள்ளது. 

இதைத்தொடர்ந்து தமிழக அரசாணைக்கு எதிராக சமூக ஆர்வலர் ட்ராபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அவர் அளித்த மனுவில், " சிலைகடத்தல் தொடர்பான வழக்குகளை பொன். மாணிக்கவேல் தலைமையிலான குழு தான் தொடர்ந்து விசாரிக்க வேண்டும். தமிழக அரசு வழக்குகளை சிபிஐ-க்கு மாற்றியதை ரத்து செய்ய வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர இருக்கிறது. 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close