நீடூழி வாழ வேண்டும்: கருணாநிதிக்கு தமிழில் வாழ்த்து கூறிய பவன் கல்யாண்

  Padmapriya   | Last Modified : 05 Aug, 2018 03:51 pm
pawan-kalyan-greets-karunanidhi-for-his-speedy-recovery

திமுக தலைவர் கருணாநிதியின் பூரண உடல் நலம் பெற்று நீடூழி பல நூறாண்டுகள் வாழா வேண்டும் என்று இறைவனை பிராதிப்பதாக ஜனசேனா கட்சியின் தலைவரும், தெலுங்கு நடிகருமான பவன் கல்யாண் தமிழில் அறிக்கை வெளியிட்டுள்ளார். 

காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதியை தினமும் பல தலைவர்களும் முக்கிய பிரமுகர்களும் அவரது குடும்பத்தாரை சந்தித்து நலம் விசாரிக்கின்றனர். அவர் பூரண உடல் நலம் பெற  வேண்டி பிரபலங்களும் தொண்டர்களும் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர். 

இந்த நிலையில், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகரும் ஜனசேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண், கருணாநிதி பூரண நலம் பெற்று இல்லம் திரும்ப வேண்டும் என்று வாழ்த்தி தமிழில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், ஒப்பற்ற தமிழர் தலைவர் கருணாநிதி இன்னும் பல நூறாண்டுகள் வாழ்ந்தால், அவரது அரசியல் மற்றும் இலக்கிய அனுபவங்கள் ஒவ்வொருவருக்கும் நல்ல வழிகாட்டியாக அமையும். ஜனசேனா உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் சார்பாக, இருகரம் கூப்பி எல்லாம் வல்ல இறைவனை கலைஞர் அவர்களை கூடிய விரைவில் நம் பெற்று வீடு திரும்ப வேண்டிக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close