காவேரி மருத்துவமனையில் தி.மு.க தொண்டர்களின் கோபத்தால் கதிகலங்கிய வைகோ..!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 05 Aug, 2018 04:29 pm
dmk-volunteers-attack-vaiko-at-cauvery-hospital

காவேரி மருத்துவமனைக்கு அடிக்கடி சென்றும் கருணாநிதியை பார்க்க முடியாமல் தவித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு அங்கு தர்மசங்கடமான ஒரு சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.

உடல்நலிவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் கருணாநிதி. அவரது உடல் நலம் குறித்து தேசிய தலைவர்கள் முதல் உள்ளூர் அரசியல் பிரமுகர்கள் வரை வந்து செல்கின்றனர். ஆனாலும், கருணாநிதியை, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, முதல்வர் பழனிசாமி, காங்கிரஸ் தலைவர் ராகுல் மட்டும் தான்  நேரில் பார்த்துள்ளனர்.  மற்றவர்கள் அனைவரும், ஸ்டாலின், கனிமொழியை பார்த்து, விசாரித்துவிட்டுச் செல்கின்றனர்.

வைகோ, பல முறை மருத்துவமனை சென்றும், கருணாநிதியை பார்க்க முடியவில்லை. கடைசியாக மருத்துவமனை சென்று அவர் காரில் திரும்புகையில், மருத்துவமனை வாசலில் திரண்டிருந்த தி.மு.க தொண்டர்கள் சிலர், கோபமாகி இருக்கின்றனர். அதில் ஒருவர், 'நம்ம தலைவர், ஆறாவது முறை முதல்வராக முடியாம போனதுக்கு இவர் தான் காரணம்' என வைகோவின் கார் மீது கோபமுடன் ஓங்கி அடித்திருக்கிறார்.

இதனால் அதிர்ச்சியான வைகோ காரை வேகமாக ஓட்டச்சொல்லி டிரைவரை உத்தரவிட, பறந்து சென்றுள்ளார் வைகோ. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close