தி.மு.க தலைவராகிறார் அய்யாதுரை... பதவியேற்பது எப்போது..?

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 09 Aug, 2018 03:50 am
ayyadirai-to-become-dmk-chief-after-karunanidhi

தி.மு.க தலைவராக கடந்த 50 ஆண்டுகளாக பதவி வகித்து வந்த கருணாநிதி காலமானதைத் தொடர்ந்து அவர் வகித்து வந்த பதவியை அய்யாத்துரை ஏற்க உள்ளார். 

கருணாநிதி உடல்நலக்குறைவால் ஓய்வெடுத்து வந்தபோது கட்சியை வழி நடத்த செயல்தலைவர் பதவி உருவாக்கப்பட்டு மு.க.ஸ்டான் கட்சிப்பணிகளை கவனித்து வந்தார். கருணாநிதி உடல் மிகவும் நலிவுற்றதால் விரைவில் தி.மு.க தலைவர் பதவியை ஏற்க உள்ளதாக கூறப்பட்டது. வரும் 19ம் தேதி தி.மு.க செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னை ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளதாக அக்கட்சித் தலைமை அறிவித்து இருந்தது. அப்போது மு.க.ஸ்டாலின் தலைவர் பதவியேற்பார் எனவும் அரிவாலய வட்டாரங்கள் தெரிவித்தன. இந்நிலையில், கருணாநிதி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து தேதி குறிக்காமல் திமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் தி.மு.க தலைமை கழகம் அறிவித்து இருந்தது.

 

இந்நிலையில் கருணாநிதி மறைவையடுத்து அந்த கூட்டம் தற்போது நடப்பதற்கான சாத்தியங்கள் இல்லை எனக் கூறப்படுகிறது. 
இதனையடுத்து தி.மு.க தலைவர் பதவி ஓரிரு மாதங்கள் காலியாகவே இருக்கும் எனக் கருதப்படுகிறது. இருப்பினும் அப்பதவியை அய்யாத்துரை ஏற்பது உறுதியாகி உள்ளது.

யார் இந்த அய்யாத்துரை..? 

கருணாநிதியின் இரண்டாவது மனைவி தயாளு அம்மாள். அவருக்கு மூன்று மகன்களில் மு.க.அழிகிரி, ஸ்டாலின் ஆகிய இருவரும் தொண்டர்களுக்கு பரீட்சயமானவர்கள். கருணாநிதியின் முதல் அரசியல் குரு பட்டுக்கோட்டை அழகிரிசாமி.  அவரது பேச்சால் ஈர்க்கப்பட்டே திராவிட இயக்கத்தில் சேர்ந்தார். அவரது இரண்டாம் மகனுக்கு அழகிரி எனப்பெயர் வைத்தார்.  

 தன் முதல் மகன் முத்துவுக்குத் தன் தந்தை முத்துவேலரின் பெயரைச் சூட்டினார். ஸ்டாலினுக்கு அவர் சூட்ட திட்டமிட்டிருந்த பெயர் அய்யாதுரை. அய்யா என்பது பெரியாரையும், துரை என்பது அண்ணாவையும் குறிப்பது. ஸ்டாலின் பிறந்த 1953 மார்ச்சில்தான் ரஷ்யத் தலைவர் ஸ்டாலின் மறைந்தார். கம்யூனிஸத்தின் மீது கருணாநிதிக்கு இருந்த காதலின் விளைவோடு இந்தச் சூழலும் சேர அய்யாதுரை ஸ்டாலின் ஆகிவிட்டார்! ஆக, அய்யாத்துரை என்கிற ஸ்டாலினே தி.மு.கவின் அடுத்த தலைவர் என்பது உறுதியாகி விட்ட நிலையில் அவர் எப்போது பதவியேற்கப்போகிறார்? என்கிற எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள் கழக உடன்பிறப்புகள். 
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close