வாழ்க்கையை பகிர்ந்த மூவர்... எந்த மனைவியை மானசீகமாக மதித்தார் கருணாநிதி!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 10 Aug, 2018 03:57 am

karunanidhi-s-personal-life-and-his-wives

கருணாநிதி 1924ம் ஆண்டு பத்மாவதி அம்மையாரை வழக்கறிஞர் ராகவலு தலைமையில் சுயமரியாதை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பிறந்த மகன் மு.க.முத்து.

ஆனால், நான்கு ஆண்டுகள் மட்டுமே பத்மாவதியுடன் குடும்பம் நடத்தினார் கருணாநிதி. பத்மாவதி நோய்வாய்ப்பட்டு மரணத்தை தழுவினார். 1948ம் ஆம் ஆண்டு தயாளு அம்மாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களது பிள்ளைகள் மு.க.அழகிரி, மு.க.தமிழரசு, மு.க.ஸ்டாலின், செல்வி. கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாள். இவர்களது மகள் கனிமொழி. தயாளு அம்மாளுடன் கருணாநிதி கோபாலபுரம் இல்லத்தில் வசித்து வந்தார். சி.ஐ.டி காலனியில் ராஜாத்தி அம்மாளை குடிவைத்தார். 

கருணாநிதி தன்னை கடவுள் மறுப்பு கொள்கையுடைய பகுத்தறிவுவாதியாக, நாத்திகவாதியாக காட்டிக்கொண்டாலும் அவரது கோபாலபுரம் வீட்டில் பூஜை அறை மடம் ஒன்றையும் அமைத்திருந்தார். ஆனால் அந்த மடத்தில் கடவுள் படங்களுக்கு பதிலாக அவரது தாயார் அஞ்சுகம் அம்மையார், தந்தையார் முத்துவேலர், முதல் மனைவி பத்மாவதி அம்மையார் ஆகிய படங்களை வைத்திருந்தார். முக்கிய நாட்களிலும், மனம் வாடிய தருணங்களிலும் அந்த படங்களுக்கு முன் நின்று கருணாநிதி மனமுருகி சில நிமிடங்கள் நின்று ஆத்மார்த்தமாக அமைதி காப்பதை இறுதிவரை கடைபிடித்து வந்துள்ளார்.

 

தனது முதல் மனைவி இறந்து 70 ஆண்டுகளைக் கடந்தும் அவரது நினைவாக  பத்மாவதி அம்மையாரை மதித்து மனமுருகி வந்துள்ளார் கருணாநிதி. இதில் முரண்பாடு என்னவெனில், முதல் மனைவிக்கு பிறந்த மூத்த மகன் மு.க.முத்து கருணாநிதி இறந்தபோதும், இறுதிப்பயணத்தின்போதும் தலைகாட்டவே இல்லை.

ஏற்கெனவே கருணாநிதியுடன் ஏற்பட்ட மனக்கசப்பால் சிறுது காலம் கருணாநிதியின் குடும்பத்தைவிட்டு தனித்து இருந்தார். சில ஆண்டுகளுக்கு முன் தான் மிகவும் வறுமையில் வாடுவதாக ஜெயலலிதாவிடம் சென்று முறையிட்டார். ஜெயலலிதா மு.க.முத்துவுக்கு உதவியாக 5 லட்சம் பணத்தை வழங்கினார். 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close