கருணாநிதிக்கு திரையுலம் சார்பில் நினைவேந்தல்!

  திஷா   | Last Modified : 12 Aug, 2018 11:41 am
film-industry-to-pay-their-respect-to-kalaignar

தமிழக முதல்வராக 5 முறை பதவி வகித்தவர் கலைஞர் மு.கருணாநிதி. இவரைப் பற்றி நினைக்கும் போது இவரின் கடின உழைப்பு தான் முதலில் நினைவுக்கு வரும். இவர் இல்லாமல் தமிழக அரசியலுக்கு வரலாறு கிடையாது. தொடர்ந்து 50 வருடங்கள் தி.மு.க தலைவராக பதவி வகித்துள்ளார். தான் போட்டியிட்ட சட்டமன்ற தேர்தல்களில் ஒரு போதும் தோல்வியை சந்திக்காதவர். 

அரசியல் தவிர்த்து கருணாநிதியைப் பற்றி பேசுவதற்கு 'கன்டென்ட்' கொட்டிக் கிடக்கின்றன. இலக்கிய எழுத்தாளர், திரைக்கதை ஆசிரியர், பத்திரிக்கையாளர், கவிஞர் என பன்முகத் தன்மைக் கொண்டவர். குறிப்பிட்டவர்கள் மட்டுமே கோலோச்சிய சினிமா துறையின் இரும்பு கதவுகளை திறந்து தன்னைப் போன்ற சாமனியனும் சாதிக்க வழி செய்தவர். சமூகக் கருத்துக்களை சினிமா மூலம் கடைகோடி மக்களுக்கும் கொண்டு சென்றவர். 

வயது மூப்புக் காரணமாக ஏற்பட்ட உடல் நலக் குறைவால் கடந்த செவ்வாய் கிழமை மாலை இவ்வுலகிலிருந்து நிரந்தர ஓய்வுப் பெற்றார். இவரின் மறைவு தமிழகத்திற்கு மிகப் பெரிய இழப்பைக் கொடுத்துள்ளது. 

இந்நிலையில் கருணாநிதிக்கு திரையுலகம் சார்பில் நினைவேந்தல் நிகழ்வு நாளை நடக்கிறது. சென்னை காமராஜர் அரங்கில் நாளை மாலை 5 மணிக்கு இந்த நினைவேந்தல் நிகழ்ச்சி நடக்கும் என நடிகர் சங்கம் அறிவித்திருக்கிறது.

இந்த நிகழ்ச்சியில் திரைத்துறையைச் சேர்ந்த அனைத்து சங்க நிர்வாகிகளும் அதன் உறுப்பினர்களும் பங்கேற்க வேண்டும் என்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளம், தென்னிந்திய நடிகர் சங்கம் உள்ளிட்ட சங்கங்கள் கேட்டுக்கொண்டுள்ளன.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close