கலைஞர் நினைவிடத்தில் 5-வது நாளாக குவியும் மக்கள்

  திஷா   | Last Modified : 12 Aug, 2018 07:28 pm
physically-challenged-people-pays-their-respect-to-kalaignar

கடந்த செவ்வாய் கிழமை மாலை மறைந்த திமுக தலைவர் கருணாநிதியை மெரீனாவில் அடக்கம் செய்ய 15 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு அனுமதி கிடைத்தது. புதன் மாலை அவரது உடல் மெரீனா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் நல்லடக்கம் செய்யப் பட்டது. அப்போதிலிருந்து அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள், பொதுமக்கள் என கருணாநிதியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

தொடர்ந்து 5-வது நாளான இன்று, காலை முதலே கூட்டம் அதிகரித்து வருகிறது. அவரின் மூத்த மகன் மு.க.முத்து, மகள் கனிமொழி, நடிகை ராதிகா ஆகியோர் அவரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்கள். அதோடு மாற்றுத் திறனாளிகள், பொதுமக்கள் என வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. 

டிசம்பர் 3 இயக்கத்தைச் சேர்ந்த தீபக், 'மாற்றுத் திறனாளிகள் எந்தத் துறையில் படித்தாலும், அவர்களுக்கு கல்விக் கட்டணம் இல்லை என்பதை கருணாநிதி தான் கொண்டு வந்தார். 19.08.2008-ல் ஒரே நாளில் 11 திட்டங்களை மாற்றுத் திறனாளிகளுக்காக செயல் படுத்தினார். கண்ணொளி திட்டம், 15 நிமிஷம் லேட்டாக வரலாம், சீக்கிரம் போகலாம் என எங்களுக்காக பல சலுகைகளைக் கொண்டு வந்தார். எங்களின் உரிமைக்காக நின்றார். எங்களுக்கு நிறைய செய்திருக்கிறார். அன்று கூட்டத்தில் அஞ்சலி செலுத்த வர முடியவில்லை. அதனால் இன்று எங்களின் நன்றியை அவருக்கு காணிக்கையாக்குகிறோம்' என்றார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close