சுதந்திர தினத்தையொட்டி மது கடைகள் நாளை மூடப்படும்

  சுஜாதா   | Last Modified : 14 Aug, 2018 09:14 am
salem-collector-ordered-to-close-tasmac-tomorrow

சுதந்திர தினத்தை முன்னிட்டு சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபானக் கடைகள் நாளை மூடப்பட வேண்டும் என்று சேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணி உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை (புதன்கிழமை) சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபானக் கடைகள் மற்றும் மது கூடங்கள் மூடப்படுகிறது. எனவே, சேலத்தில் உள்ள அரசு உரிமம் பெற்ற டாஸ்மாக் மதுக்கடைகள், மது பார்கள் மற்றும் ஹோட்டல் பார்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும்.

மேலும், அன்றைய நாளில் மது விற்பனை செய்யக்கூடாது என அறிவிக்கப்படுகிறது. இதனை மீறி விற்பனை செய்பவர்கள் மீது அரசு விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறினார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close