மூன்று மாதத்தில் ஸ்டாலினுக்கு என்ன நடக்கும் தெரியுமா? மிரட்டிய அழகிரி!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 16 Aug, 2018 03:10 am
m-k-azhagiri-s-threat-to-stalin

2014ஆம் ஆண்டு அழகிரி மீது பல்வேறு குற்றச்சாடுகளை கூறி தி.மு.க.,  பொதுச் செயலாளர் க. அன்பழகன், அவரை கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்வதாக அறிவித்தார்.

இதனால் ஆத்திரம் கொண்ட மு.க.அழகிரி ஜனவரி 24ஆம் தேதியன்று கோபாலபுரம் இல்லத்திற்கு வந்து தி.மு.க. தலைவர் கருணாநிதியிடம் பெரும் வாக்குவாதம் நடத்தியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த கருணாநிதி குடும்பப்பிரச்னையை முதன்முறையாக செய்தியாளர்களை அழைத்து வெளிப்படையாக அறிவித்தார். அப்போது, ‘24ஆம் தேதி விடியற்காலை என்னுடைய வீட்டிற்குள்ளே மு.க.அழகிரி நுழைந்து, படுக்கையில் இருந்த என்னிடம் ஸ்டாலினைப் பற்றிப் புகார்கூறினார். 

 விரும்பத்தகாத வெறுக்கத்தக்க வார்த்தைகளையெல்லாம் மளமளவெனப் பேசி, என்னைக் கொதிப்படைய வைத்தார். நினைத்தாலே என் நெஞ்சு வெடிக்கக்கூடியதும் இதயம் நின்று விடக்கூடியதுமான ஒரு சொல்லையும் அவர் சொன்னார். அதாவது ஸ்டாலின் இன்னும் மூன்று - நான்கு மாதங்களுக்குள் செத்துவிடுவார் என உரத்த குரலிலே என்னிடத்தில் சொன்னார். எந்தத் தகப்பனாராவது இதுபோன்ற வார்த்தைகளைத் தாங்கிக்கொள்ள முடியுமென்று யாரும் கருத முடியாது" என்று கலங்கிய மனதுடன் பேட்டியளித்தார் கருணாநிதி. 

அவரது இந்த பேட்டி தி.மு.கவில் பலத்த சலசலப்பை ஏற்படுத்தியது. இதனைக் காரணம் காட்டி மார்ச் 25ஆம் தேதி அழகிரி கட்சியிலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார். இதனால் மேலும், கொத்திப்பான அழகிரி  சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் தி.மு.கவின் வெற்றி குறித்து எதிர்மறையான கருத்துக்களை தெரிவித்து கட்சிக்குள் பரபரப்பை ஏற்படுத்தினார். தன்மீது கூறிய குற்ற்சாட்டுக்கு கருணாநிதி வழியிலேயே செய்தியாளர்களை அழைத்து விளக்கமளித்தார் மு.க.அழகிரி.  ‘’கருணாநிதி என் மீது இப்படி ஒரு அபாண்டத்தைச் சுமத்துவார் என்று கனவில் கூட நினைத்துப் பார்த்திருக்க முடியாது. ஆனால் அதை அவர் எனக்கு வழங்கிய பிறந்த நாள் வாழ்த்து சொன்னதாக நான் ஏற்றுக் கொள்கிறேன்.
நான் 24ந் தேதி காலை தலைவரை சந்தித்து விளக்கங்களை எடுத்துச் சொன்னேன். தொண்டர்களின் குற்றச்சாட்டுகளையும் ஒன்றிய செயலாளர்களின் குற்றச்சாட்டுகளையும் தலைவரிடம் காண்பித்தேன். அதற்குக் கிடைத்த பரிசு என்னை கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்தது. நியாயத்துகாக தொண்டனுக்காக போராடியதற்காக இப்படிப்பட்ட பரிசு கிடைத்தது.

ஸ்டாலினை பற்றி பேசியதால் நீக்கம் என்கிறார்கள். ஸ்டாலின் எனது தம்பிதானே. எனது தம்பியை பற்றி நான் பேசக்கூடாதா? ஸ்டாலினை பற்றி பேசினால் கட்சியில் இருந்து நீக்கி விடுவார்களா?  தொண்டர்களுக்கு என்னைப் பற்றி நன்றாகத் தெரியும். தலைவர் நன்றாக இருக்கணும். நூறாண்டுகள் வாழணும். அவருக்கு முன்னாடி நாங்கள் சாகணும். அவர் சிந்தும் கண்ணீர் எங்கள் பிணத்தின் மீது விழ வேண்டும் என்றுதான் நாங்கள் ஆசைப்படுகிறோம்’’ என விளக்கமளித்தார். 

இதற்கு பிறகு, மு.க. ஸ்டாலினுக்கும் அழகிரிக்கும் இடையில் வெளிப்படையான மோதல் நடக்கவில்லை. தந்தையுடன் சமரசமாகி அவரை அவ்வப்போது கோபாலபுரம் இல்லத்திற்கு வந்து சந்தித்துச் சென்றார் மு.க.அழகிரி. தி.மு.க. தலைவர் கருணாநிதி மரணமடைந்து அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட தருணத்தில் அவர் மீது போர்த்தப்பட்டிருந்த தேசியக் கொடி மூத்த மகனான மு.க. அழகிரியிடம் கொடுக்கப்படாமல் மு.க. ஸ்டாலினிடமே வழங்கப்பட்டது. இந்த நிகழ்வுதான் அழகிரியின் இப்போதைய ஆத்திரத்திற்கு காரணமாக கூறப்படுகிறது. 
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close