எதிரிகளுக்கு எதிராக செயல்படுவோம்: கமல்ஹாசன் ட்விட்டர்    

  சுஜாதா   | Last Modified : 16 Aug, 2018 09:35 am
kamalhassan-tweet-about-people-participated-in-village

தன்னுடைய வேண்டுகோளை ஏற்று  கிராம சபை கூட்டங்களில் பங்கேற்றவர்களுக்கு கமல்ஹாசன்  தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.  

அதில், “தமிழ்நாட்டில் நடைபெறுகின்ற கிராம சபை கூட்டங்களில் மக்கள் பெரும் திரளாக கலந்துகொள்வதை பார்க்கும்போது எனக்கு மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. நமது சுதந்திரத்தை மிகச்சரியான புரிதலுடன் நாம் கொண்டாடுகிறோம்.

இதேபோன்று அனைத்து கிராம சபை கூட்டங்களிலும், நாம் அனைவரும் விழிப்புடன் கலந்துகொண்டு, நம் நாட்டு வளர்ச்சியின் எதிரிகளுக்கு எதிராகவும், ஊழலுக்கு எதிராகவும் கவனத்துடன் இருப்போம்” என்று கமல்ஹாசன் கூறியுள்ளார். 

முன்னதாக, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில் நடைபெறும் கிராம சபை கூட்டங்களில்  மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகிகள்  பங்கேற்குமாறு வேண்டுகோள் விடுத்து  நேற்று முன்தினம் வீடியோ ஒன்றை வெளியிட்டார். 

அதனை ஏற்று அவரது நிர்வாகிகள், பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில்  கலந்துகொண்டனர். தன்னுடைய வேண்டுகோளை ஏற்று  கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கமல்ஹாசன்  தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close