ஜெயலலிதா இருந்திருந்தால் கருணாநிதிக்கு இடம் கொடுத்திருப்பார்... சிறையில் உருகிய சசிகலா!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 18 Aug, 2018 10:16 pm
jayalalithaa-would-have-been-in-karunanidhi-in-marina-sasikala-says

அ.ம.மு.க பொதுச்செயலாளர் சசிகலாவுக்கு நேற்று 61வது பிறந்த நாள். இதனையொட்டி பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவை காண நேற்று டி.டி.வி.தினகரன் தனது குடும்பத்தினருடன் பரபன அக்ரஹாரா சிறைக்கு சென்றனர். 

அப்போது, டிடி.வி.தினகரனிடம் கருணாநிதியின் மறைவு குறித்து உருக்கமாக விசாரித்து இருக்கிறார் சசிகலா. ’’கருணாநிதி இறந்து விட்டார் என்கிற செய்தியை கேட்டபோது என்னால் நம்பவே முடியவில்லை. சாப்பிட முடியாத அளவிற்கு வருத்தமாகி விட்டது. எங்களது திருமணத்தை அவர்தான் நடத்தி வைத்தார். அப்போது பலமுறை அவரை நேரில் பார்த்திருக்கிறேன். அக்கா இருந்திருந்தால் அவருக்கு மெரினாவில் மறுப்பேதும் சொல்லாமல் தானாக முன் வந்து  இடம் கொடுத்திருப்பார்.

மெரினாவில் இடம் கேட்டு கருணாநிதி குடும்பத்தினர் நேரில் சென்று கேட்டபோதும் எடப்பாடி பழனிசாமி ஏன் இப்படி நடந்து கொண்டார்? அவர் நமகே நம்பிக்கை துரோகம் செய்தவராயிற்றே... பிறகு எப்படி மற்றவர்களை மதிப்பார். எல்லாம் கூடிய சீக்கிரத்தில் மாறும்.’ என கருணாநிதிக்காக சசிகலா உருகியதாகக் கூறுகின்றனர் அவரது ஆதரவாளர்கள். 


சசிகலா பிறந்த நாளை முன்னிட்டு மதிய உணவும், இனிப்பு வகைகளும் பரபன அக்ரஹார சிறைவாசிகளுக்கு வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. 
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close