ரஜினி கட்சிக்காக பிரம்மாண்டமாக உருமாறும் டி.வி சேனல்!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 20 Aug, 2018 05:58 am
tv-channel-to-get-behind-rajinikanth

ரஜினிகாந்த் கட்சி ஆர்ம்பிக்க உள்ள நிலையில் அவரது கொள்கை, கட்சிக்காக பிரம்மாண்டமாக ஒரு டிவி சேனல் புதுப்பிக்கப்பட்டு வருகிறது.

அ.தி.மு.க. தி.மு.க தொடங்கி நேற்று முளைத்த கட்சிகள் அனைத்தும் தங்களுக்கென ஒரு டி.வி சேனல்களை நிறுவி வந்துள்ளனர். இந்நிலையில், ரஜினிகாந்த் தனது ரசிகர் மன்றத்தினரை ஒருங்கிணைத்து ரஜினி மக்கள் மன்றம் அமைப்பை தொடங்கி அடுத்த கட்டமாக கட்சியை ஆரம்பிக்க உள்ளார். 

அவருக்கு ஆதரவாக எம்.ஜி.ஆர் நிகர் யுனிவர்சிட்டி நிறுவனரும் வேந்தருமான ஏ.சி.சண்முகம் இருந்து வருகிறார்.  அவர் நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக வானவில் தொலைக்காட்சியை தொடங்கினார். ஆனால், மக்களிடையே வரவேற்பை பெறாததால் வானவில் டி.வி பெயரளவிற்கு மட்டுமே இயங்கி வந்தது. இந்நிலையில், ரஜினி கட்சி ஆரம்பிக்க இருப்பதால் மேலும் சில கோடிகளை முதலீடு செய்து அந்த சேனலை பிரம்மாண்டமாக மீண்டும் புதுப்பிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. 

சமீபத்தில் கலைஞர் தொலைக்காட்சியை புதுப்பிக்கும் வகையில், தி.மு.க தரப்பில் மேலும் 500 கோடி ரூபாய் முதலீடு செய்து விஸ்தரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. 
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close