ஸ்டாலின் -அழகிரி மோதல்... புகுந்து விளையாட தயாராகும் எடப்பாடி பழனிசாமி!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 20 Aug, 2018 06:14 am
edappadi-palanisamy-plans-to-use-stalin-azhagiri-conflict

ஸ்டாலின் மீதான கோபத்தில் அழகிரி தனது ஆதரவாளர்களை ஒருங்கிணைத்து வருகிறார். இந்த நிலையில் அழகிரியின் ஒவ்வொரு அசைவையும் கண்காணிக்க உத்தரவிட்டு இருக்கிறாராம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. 

மெரினாவில் இடம் கொடுக்கவில்லை என்ற கோபம்  ஸ்டாலின் தரப்பு இருக்கிறது. அதை வைத்தே அரசியல் நடத்த தொடங்கி விட்டார் அவர். இதனால் நமது பெயர் டேமேஜ் ஆகி இருக்கிறது. ஒரு சிலர் நம்மை வேறொரு கண்ணோட்டத்தில் பார்க்க ஆரம்பித்துள்ளனர். ஜெயலலிதா இறந்தபோது கூட அ.தி.மு.க.வில் இப்படியொரு பரபரப்பு நிகழ்ந்ததில்லை.  இப்போது திமுகவினர் கருணாநிதி மரணத்தை துருப்பு சீட்டாக பயன்படுத்தி அரசியல் செய்ய ஆரம்பித்துள்ளனர்.

 

ஆனால், அவர்கள் கட்சிக்குள்ளும், குடும்பத்திற்குள்ளும் மோதல் தொடங்கியுள்ளது.  அழகிரி திமுகவில் இல்லை என்றபோதும் தென் மாவட்டங்களில் செல்வாக்கு பெற்றவர்.  இப்போது தனது  ஆதரவாளர்களை ஒருங்கிணைக்கும்  வேலையில் அழகிரி இறங்கி இருக்கிறார். இந்த நேரத்தில் ஸ்டாலின் எதிர்ப்பாளர்களை அழகிரிக்கு ஆதரவாக கொண்டு சேர்க்க வேண்டும். அதை நாம் செய்தாலே தி.மு.க அந்தப் பிரச்னையில் மூழ்கி விடும்.

இதற்காக  அழகிரிக்குநேரடியாக உதவி செய்யாவிட்டாலிம் நம் பக்கம் சில வேலைகளை நடத்த வேண்டும்.  அழகிரியால் தனி அணியை உருவாக்கி அரசியலில் கோலோச்ச முடியாது. நமக்கு ஸ்டாலின் குடைச்சலை கொடுக்கும் போதெல்லாம் அழகிரியை வைத்து அவருக்கு டென்ஷனை உண்டாக்கினாலே போதும். நமக்கு பெரிய அளவில் பிரச்சினை வராது' என கணக்குப்போட்டு காய் நகர்த்த ஆரம்பித்திருக்கிறார் என்கிறார்கள் எடப்பாடி அடிப்பொடிகள்.

 

அதனை கொண்டு செலுத்தும் வகையில், தென் மாவட்டங்களில் உள்ள அழகிரி ஆதரவாளர்களையும், ஸ்டாலினின் எதிர்ப்பாளர்களையும் கணக்கெடுக்கும் பணியை அ.தி.மு.க.வினர் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close