எடப்பாடி அழுத்தம்... தூது விடும் டி.டி.வி.தினகரன்!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 21 Aug, 2018 05:39 am
edappadi-pressure-t-t-v-dinakaran-bringing-back-former-team

விட்டுச் சென்றவர்களுக்கும், தானே விலகிச் சென்றவர்களுக்கும் இப்போது வலிய சென்று அழைப்பு விடுத்து வருகிறார் அ.ம.மு.க துணைப்பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன். 

கட்சிகளின் பிரச்சார பீரங்கியாக இருப்பது ஊடகங்கள். அதனால்தான் அனைத்து கட்சிகளும் ஆளுக்கொரு தொலைக்காட்சியை சொந்தமாக வைத்துள்ளன. டி.டி.வி.தினகரன் கட்சி அமமுக கட்சியை ஆரம்பித்த போது ஓரிரு தொலைக்காட்சிகளை தவிர பல செய்தி சேனல்கள் அவரது பேச்சுக்களை நேரலையாக ஒளிபரப்பி வந்தன. ஆனால், அதன்பிறகு அவரது செய்திகள் பல தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகவில்லை. காரணம் ஆளும் கட்சியின் அழுத்தம் எனக் கூறப்படுகிறது. டி.டி.வி.தினகரன் செய்திகளை ஒளிபரப்பும் சேனல்கள் அரசு கேபிள் பிரச்னைகளில் சிக்கின.

 

இதனால், டி.டி.வி.தினகரன் குறித்த செய்திகளை ஒளிபரப்பாமல் இருட்டடிப்பு செய்துவருகின்றன. இந்நிலையில், இடைத்தேர்தல், நாடாளுமன்றத் தேர்தலை மையப்படுத்தி தேர்தல் பொறுப்பாளர்களை நியமிப்பது, வேட்பாளர்களைத் தேர்வு செய்து வருவது என தீவிரமாக செயல்பட்டு வருகிறார் டி.டி.வி.தினகரன். இந்நிலையில், ஜெயா தொலைக்காட்சி செய்திப்பிரிவை மீண்டும் புணரமைக்கும் பணியை கையிலெடுத்து இருக்கிறார் அவர். 

ஜெயலலிதா இருந்தபோது துடிப்பாக பணியாற்றிய பலரும் இப்போது ஜெயா தொலைக்காட்சியில் இல்லை. பல ஆண்டுகளாக இருந்த மாவட்டச் செய்தியாளர்கள் அந்தந்த தொகுதிகள் மற்று ஆட்களை பற்றி முழுமையாக அறிந்து வைத்திருந்தனர். அதனால், அப்போதைய செய்திகளில் துல்லியமும், விரைவும் இருந்தது. அவர்களில் மிகப்பெரும்பாலானோர் விலகி சென்று விட்டனர். அவர்களை மீண்டும் அழைத்து வந்தால் உதவியாக இருக்கும் எனக் கருதிய டி.டி.வி.தினகரன், விலகிச் சென்ற செய்தியாளர்களிடமே பணிக்கு திரும்ப வருமாறு அழைப்பு விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

சிலர் மீண்டும் பணிக்கு திரும்ப மறுத்து வருகின்றனர். அவர்களை மீண்டும் அழைத்து வருவதற்கு அப்பகுதியைச் சேர்ந்த முக்கியமானவர்கள் தூது செல்வதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவர்களில் சிலரும் திரும்பி வந்து பணியைத் தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், பலர் விரைவில் ஜெயா டிவிக்கு திரும்ப உள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close