கருணாநிதி கூறிய கடைசி வார்த்தை... அதிரவைக்கும் மு.க.அழகிரி!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 22 Aug, 2018 12:45 pm
the-last-word-karunanidhi-said-m-k-azhagiri-says

’’கருணாநிதி என்னிடம் கடைசியாக கூறிய வார்த்தைகள் நினைவில் உள்ளன. அவர் என்ன நினைத்தாரோ அதன்படி செயல்படுவேன்’’ என மு.க.அழகிரி தெரிவித்துள்ளார். 

மு.க.அழகிரியின் திடீர் போர்க்கொடியால் ஸ்டாலின் தரப்பு அதிருப்திடைந்து வருகிறது. செப்டம்பர் 5-ம் தேதி அழகிரி பேரணி ஒன்றை நடத்தவிருப்பதாக அறிவித்துள்ளார். இதன் மூலம் தனது ஆதரவாளர்களைத் திரட்ட அழகிரி வியூகம் வகுத்துவருகிறார்.
இது குறித்து அழகிரி ‘’கருணாநிதியின் உண்மையான தொண்டர்கள் என்னுடன் உள்ளனர் என்பதை அமைதி பேரணி மூலம் நிரூபித்து காட்டுவேன். என்னை பாஜக இயக்குவதாக கூறுவது தவறு. என் பின்னால் திமுக தொண்டர்கள்தான் உள்ளனர். ரஜினியுடன் இணைந்து செயல்படுவீரா என்று கேட்கிறீர்கள். அவர் இன்னும் கட்சியே தொடங்கவில்லை. அப்படியிருக்கும் போது அவரோடு இணைந்து செயல்படுவதை எப்படி சொல்ல முடியும்.

அரசியலில் பின்னால் நடப்பதையெல்லாம் இப்போதே சொல்ல முடியாது. கருணாநிதியின் இறுதி வார்த்தைகள் தனிக்கட்சி தொடங்குவது குறித்தும் என்னிடம் நிறைய பேர் கேட்டு வருகிறார்கள். கருணாநிதி என்னிடம் கடைசியாக கூறிய வார்த்தைகள் நினைவில் உள்ளன. அதை இப்போது வெளியில் சொல்லக் கூடாது. அவர் என்ன நினைத்தாரோ அதன்படி செயல்படுவேன்’’ எனத் தெரிவித்துள்ளார் அழகிரி. 

 அழகிரியின் பேரணி குறித்து ஸ்டாலின் தரப்பினர் தீவிர ஆலோசனையில் இறங்கியுள்ளனர். அழகிரியின் பேரணிக்கு இப்போது கட்சியில் இருக்கும் நிர்வாகிகள் யாரும் பின்னால் அணிவகுத்துவிடக் கூடாது. அதற்கு, கட்சியின் கட்டுப்பாட்டை நம் வசம்  கொண்டுவந்துவிட வேண்டும். அழகிரியின் பேரணிக்குப் பின்னால் பொதுக்குழுவைக் கூட்டினால், பொதுக்குழுவில் சலசலப்பு ஏற்படும் வாய்ப்பும் உள்ளது. அதனால், அவர் பேரணியை நடத்துவதற்கு முன்பாகவே நாம் பொதுக்குழுவை நடத்தி தலைவராக ஸ்டாலினைத் தேர்ந்தெடுத்துவிட வேண்டும் என்ற முடிவுக்கு ஸ்டாலின் குடும்பத்தினரும் அவருடைய ஆதரவாளர்களும் அவரிடம் வலியுறுத்தியுள்ளதாகச் சொல்லப்படுகிறது. 

அதன் பிறகே ஆகஸ்ட் 28-ம் தேதி பொதுக்குழு நடைபெறும் என்றும், 26-ம் தேதி தலைவர் பதவிக்கான வேட்புமனுத் தாக்கல் செய்யப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டது. தலைவர் பதவிக்கு கருணாநிதியைப்போல் ஸ்டாலினும் போட்டியின்றி தேர்வு செய்யும் நிலையே இப்போது உள்ளது. இதன் மூலம் அழகிரியின் முயற்சிக்கு முட்டுக்கட்டை போடும் நிலை உருவாகி உள்ளதாக ஸ்டாலின் தரப்பினர் கூறுகின்றனர். 
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close