மு.க. ஸ்டாலின் கிடுக்கிப்பிடி... அதிரடியாக களமிறங்கும் உதயநிதி!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 23 Aug, 2018 02:35 am
udhayanidhi-joins-stalin-operation-to-nullify-azhagiri

மு.க.அழகிரி போர்க்கொடி உயர்த்தியதில் இருந்து எச்சரிக்கையாக இருந்து வருகிறார் மு.க.ஸ்டாலின். தி.மு.க நிர்வாகிகளையும் கண்காணித்து வருகிறார்.

 

இந்நிலையில், திமுக சார்பில் கருணாநிதியின் நினைவேந்தல் கூட்டம் திருச்சி, மதுரையில் நடந்து முடிந்திருக்கிறது. இதே போல பல ஊர்களிலும் நினைவேந்தல் கூட்டம் நடந்து வருகிறது. இதனையடுத்து, தி.மு.க, நிர்வாகிகள்  யாரும் வெளியூர் கூட்டங்களுக்கு வர வேண்டாம் என உத்தரவிட்டு இருக்கிறாராம் மு.க.ஸ்டாலின்.

ஜெ.அன்பழகன் திருச்சி, மதுரைக்கு செல்ல தயாராக இருந்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த ஸ்டாலின், ஜெ.அன்பழகனை தொடர்பு கொண்டு, ‘யாரும் எங்கேயும் செல்ல வேண்டாம்...' எனக் கூறி விட்டாராம். ஆனால், அனைத்துக் கூட்டங்களுக்கும் உதயநிதியும், மகேஷ் பொய்யாமொழியும் தவறாமல் கிளம்பி விடுகிறார்கள்.

அத்தோடு, அழகிரியின் மகன் துரை தயாநிதி திமுகவில் யாருக்கெல்லாம் போன் போட்டுப் பேசுகிறாரோ அவர்களுக்கெல்லாம் அடுத்த சில மணி நேரங்களில் உதயநிதியிடமிருந்து போன் போகிறதாம். 'அடுத்து நம்ம ஆட்சிதான். எது செய்யுறதா இருந்தாலும் யோசிச்சு செய்யுங்க... ' என அட்வைஸ் செய்வதை அவர் தொடர்ந்து வருவதாக கூறப்படுகிறது. 
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close