தாலி அறுப்பு கி.வீரமணியின் தலைமையை ஏற்பதா..?? தமிழிசைக்கு கடும் எதிர்ப்பு!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 24 Aug, 2018 11:16 am
tamilisai-receives-flak-for-attending-program-headed-by-k-veramani

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் கலைஞரின் புகழுக்கு வணக்கம் நிகழ்ச்சியில் பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உரையாற்றுவதற்கு கடும் எதிர்ப்பு எழுந்து வருகிறது. 

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு அஞ்சலிக் கூட்டங்கள் பல்வேறு ஊர்களில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வரும் 26ம் தேதி நெல்லையில், கலைஞரின் புகழுக்கு வணக்கம் என்கிற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் அரசியல் ஆளுமை: கலைஞர் என்கிற தலைப்பில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமையில் நினைவுரை நடைபெற உள்ளது. இதில், பா.ஜ.க.,வுக்கு எதிரான சிந்தனை கொண்ட தலைவர்கள் பலரும் கலந்து கொள்ள உள்ளனர். 

திருநாவுக்கரசர், கே.எம்.காதர் மைதீன், தொல்.திருமாவளவன், அப்துல் சமது பலர் கலந்து கொண்டாலும், தாலியறுப்பு போராட்டத்தை நடத்திய கி.வீரமணி தலைமையில் பங்கேற்கக் கூடாது என  தமிழிசை சவுந்தரராஜனுக்கு கரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சிலர், ’’கடந்த 2015ம் ஆண்டு  தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் பெரியார் திடலில் தாலி அகற்றும் போராட்டம் நடந்தது. அப்போது மாட்டுக்கறி பிரியாணி சாப்பிட்டு போராட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தவர்தான் இந்த கி.வீரமணி. மதவாத சக்திகளுக்கு எதிராக செயல்படுவதாக நினைத்து கீழ்த்தரமாக செயல்படும் அவரது தலைமையின் கீழ்  நடக்கும் நிகழ்ச்சியில் தமிழிசை பங்கேற்கக்கூடாது. 

மதவாதம் பேசும் இவர்கள் ரம்ஜானின்போது தொப்பி மாட்டிக்கொண்டு நோன்பு கஞ்சி குடிப்பார்கள். கிறிஸ்தவர்களின் விழாவில் பங்கேற்று பங்குத்தந்தையுடன் மகிழ்ச்சியை பங்குபோட்டுக் கொள்வார்கள். ஆனால், இந்து மத விழா என்றால் ஒரு வாழ்த்துக் கூடச் சொல்வதில்லை. அதைக்கூட எதிர்பார்க்கவில்லை. இழிவுபடுத்தாமல் இருந்தால் போதும். இந்து மதத்தை இழிவுபடுத்தி அரசியல் பிழைக்கும் அவர்கள் நடத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்கக்கூடாது.

 

பா.ஜ.கவுடன் இனி எப்போதும் கூட்டணி இல்லை என தி.மு.க., வெளிப்படையாகவே அறிவிக்கிறது. அப்படி இருக்கும்போது எதற்காக தமிழிசை அவர்களது நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டும்?’’ என்கிறார்கள். ’தோற்றால் பெரியார் வழி; வென்றால் அண்ணா வழி’ என்பது கருணாநிதியின் பிரசித்தமான சொற்றொடர். அதாவது, ‘வென்றால் ஆட்சியில் அமர்ந்து மக்கள் பணியாற்றுவோம்; இல்லையென்றால், பொதுப் பிரச்சினைக்குப் போகாமல் பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்து அரசியல் ஆதாயம் தேடிக் கொண்டிருப்போம்’ என்பது அதன் பொருள்.
பகுத்தறிவு, சுயமரியாதை, வர்ணாஸ்ரம எதிர்ப்பு,  மதவாத சக்திகளை வீழ்த்துவது’ போன்ற கருத்துக்களை விதைத்து கட்சி நடத்தி வரும் சுயநலவாதிகள் அவர்கள். 

இப்போதும் பாஜகவை எதிர்க்கிறோம் என்ற பெயரில், துருப்பிடித்த, உளுத்துப்போன பெரியாரிய அரசியலை முன்னெடுப்பது தி.மு.க.வுக்கு எந்த வகையில் கை கொடுக்கும் என்ற சந்தேகம், அக்கட்சிக்குள் இருக்கும் பலரிடையே இருக்கிறது. 50,60 ஆண்டுகளுக்கு முந்தைய சமூக நிலைக்கு ஏற்றபடி பெரியார் பேசிய கருத்துக்களை இப்போது தூசி தட்டி எடுத்து தூக்கிப் பிடிப்பதை இன்னும் விரும்புகிறது தி.மு.க. ஸ்டாலின் அதற்கு வர்ணம் பூசி வளர்த்து வருகிறார். அவரே பாஜகவுடன் கூட்டணி இனி எப்போதும் இல்லை என்கிறார். எதற்காக இன்னும் தமிழிசை சவுந்தரராஜன் அவர்களுடன் ஒட்டிக்கொண்டிருக்கிறார் எனத் தெரியவில்லை’’ எனவும் கொதிக்கிறார்கள். 

 சாதி, மத வெறியர்கள் தலை தூக்காமல் தடுக்க காங்கிரஸ், இடது சாரிகள், விடுதலை சிறுத்தைகள், இஸ்லாமிய அமைப்புகள், சிறுபான்மையினர் இணைந்து போராட வேண்டும் என்கிறார் திருமாவளவன். அப்படிப்பட்டவர்கள் ஒன்று சேர்ந்து எப்படியோ வீணாய் போகட்டும்.. நமக்கென்ன அங்கே வேலை? அதுவும் வீரமணி தலைமை ஏற்கும் கூட்டத்தில் தமிழிசை பேசப்போவெதெல்லாம்  அபத்தத்தின் உச்சம்’’ என்கிறார்கள்.

இந்த விஷயம் சமூக வலைதளங்களிலும் பகிரப்பட்டு வருகிறது. பலரும் தமிழிசைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து பதிவிட்டு வருகின்றனர்.  
’’கி.வீரமணி தலைமையில் கருணாநிதிக்கு தமிழிசை வீர உரை நிகழ்த்த வருகிறார். திமுக ஆதரவோடு இஸ்லாமிய ஜிகாதிகளால் கொல்லப்பட்ட 161 இந்து உணர்வாளர் குடும்பங்களும் வாரீர்’ என அதிருப்தியை வெளியிட்டுள்ளனர். 

’’ஸ்டாலினுக்கு முதல்வராகும் யோகமே கிடையாது... எதிர்காலத்தில் திமுக சார்பில் ஒரு பெண் தான் முதல்வராக வாய்ப்புண்டுன்னு சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். இத்தனை நாளா அது கனிமொழின்னு நினைச்சுக்கிட்டிருந்தேன்... அது தமிழிசை சௌந்தரராஜன்னு இப்பத்தான் தெரியுது...’’ என்றும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

தாலி அறுப்பு வீரமணி தலைமையில் கலைஞர் புகழ் வணக்கம் நிகழ்ச்சி.. தமிழக பாஜக தலைவர் தமிழிசை கலந்து கொள்கிறார். இந்துக்களுக்கு எவ்வளவு பெருமை...? இருக்கிற ஓட்டு கூட கிடைக்காது தமிழக பாஜகவுக்கு’’ என்றும் ’தமிழிசை அக்காவ சும்மா திட்டாதீங்க காவிகளே.. 2019ல் தமிழகத்தில் திமுக -பாஜக கூட்டணி உறுதி’’ என்றும் நையாண்டி செய்து வருகின்றனர். 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close