சிறையில் சசிகலாவுக்கு நேர்ந்த சோகம்... டி.டி.வி.தினகரன் மீது உறவினர்கள் கோபம்!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 24 Aug, 2018 04:47 am
sasikala-s-unwell-in-jail-relatives-angry-on-ttv-dinakaran

பெங்களூரு சிறையில் இருக்கும் அ.ம.மு.க பொதுச்செயலாளார் சசிகலா கடந்த 18ம் தேதி தனது 61 வது பிறந்த நாளைக் கொண்டாடிய நிலையில் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  

கடந்த சில தினங்களாகவே காலை உணவை தவிர்த்து வந்துள்ளார் சசிகலா. இதனால், தகுந்த நேரத்திற்கு அவர் மருந்துகளை எடுத்துக்கொள்ளவில்லை எனக்கூறப்படுகிறது. இதனால் சர்க்கரையின் அளவு அதிகரித்து மயக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், நேற்று காலை அவர் சிறை அறைக்குள் மயங்கி விழுந்துள்ளார். இதனால் பதற்றமான சிறை நிர்வாக மருத்துவர்கள் சசிகலாவை சோதனையிட்டுள்ளனர்.

அப்போது சசிகலாவுக்கு சிறிது நேரம் சுயநினைவை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அவரைசோதனை செய்த மருத்துவர்கள், வெளியில் அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்கலாமா? என ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. இது ஒருபுறமிருக்க, சசிகலாவின் பிறந்த நாள் கொண்டாட்டத்தை அவரது உறவினர்கள் விவகாரமாக்கி வருவதாகக் கூறப்படுகிறது.

அ.ம.மு.க., சார்பில் சசிகலா பிறந்த நாளை சில மாவட்டங்களில் மட்டுமே கொண்டாடி இருக்கிறார்கள். இதனால் கோபம் கொண்ட சசிகலாவின் தம்பி திவாகரன் மகன் ஜெயானந்த், 'எங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தால், சசிகலா பிறந்த நாளை பிரமாண்டமாக கொண்டாடி, மாற்று கட்சி தலைவர்களையும் வாழ்த்து சொல்ல வைத்திருப்போம் ஆனால், சசிகலா பிறந்த நாளை, தினகரன் சார்பில் ஒப்புக்காக நடத்தி விட்டனர். சசிகலா மீது மரியாதை வைத்திருப்பதாக தினகரன் நாடகமாடுகிறார்.

உண்மையில் சசிகலா பெயரை வெளியில் பயன்படுத்துவதற்கு தினகரனுக்கு விருப்பமில்லை’ எனத் தெரிவித்து வருவதாகக் கூறப்படுகிறது. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
t1
Advertisement:
[X] Close