’பேரணியை விட்டுவிடுகிறேன்...’ கலக்கத்தில் வலுவிழந்த மு.க.அழகிரி புயல்!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 24 Aug, 2018 04:47 am
m-k-azhagiri-thinking-about-cancelling-the-rally

கருணாநிதி நினைவிடத்தில் தனது தலைமையில் செப்டம்பர் 5ஆம் தேதி பேரணி நடைபெறும் என அறிவித்திருந்த மு.க.அழகிரி தற்போது கலக்கத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

 

 ’’அமைதிப்பேரணியில் 1 லட்சம் பேர் கலந்துகொள்வார்கள் ஏதோ நம்பிக்கையில் கூறி விட்டேன். என்னை கட்சியில் மட்டும் சேர்த்துக்கொண்டால் போதும். பொறுப்புகள்கூடத் தேவையில்ல. பேரணியை விட்டுவிடுகிறேன்’ என தி.மு.க தலைமைக்கு தூதுவிட்டு வருவதாக கூறப்படுகிறது. பலருக்கும் போன் செய்து அழுத்துப்போய்விட்டார் அழகிரி. அவரது போனை யாரும் எடுப்பதில்லை எனக் கூறப்படுகிறது. அதன் பிறகே பதவியின்றி கட்சியில் மட்டும் சேர்த்துக்கொள்ளுமாறு தூது விட்டு வருவதாகக் கூறப்படுகிறது. 

ஸ்டாலினுக்கு என்னை கட்சியில் இணைத்துக் கொள்ள விருப்பம் இருந்தாலும் அவரது மருமகன் சபரீசன் மட்டுமே முட்டுக்கட்டை போட்டு வருகிறார். ஆத்திரத்தில்தான் அப்பாவின் நினைவிடத்தில் உள்ளக்குமுறல்களை கொட்டினேன்.  எங்கள் குடும்ப விவகாரத்தில் கட்சியின் சீனியர்கள் தலையிட்டது கோபத்தை ஏற்படுத்தியது. இப்போது கனிமொழி கூட என்னிடம் பேசுவதில்லை. மீண்டும் கட்சியில் என்னை இணைத்துக்கொண்டால் திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தலில் தி.மு.கவுக்கு வெற்றி பெற்றுத் தருவேன்’ என கோரிக்கை வைத்து வருகிறாராம் மு.க.அழகிரி.

 

அதனை மறைமுகமாகவும் மீடியாக்களிடம் தெரிவித்து வருகிறார் அழகிரி. தலைவர்கள் யாருக்கும் அழைப்பு விடுக்கவில்லை. தொண்டர்கள் தான் தலைவர்கள்’ என நாசுக்காக தெரிவித்துள்ளார் அழகிரி. தி.மு.க.,வில் இருந்து இந்தக் கோரிக்கைக்கும் பதில் வரவில்லை என்றால் கடைசிகட்ட முயற்சியாக ஸ்டாலின்  அதிருப்தியாளர்களை நேரில் சென்று சந்திக்கும் முடிவில் அழகிரி இருப்பதாக கூறப்படுகிறது. 
ஆனால், ஸ்டாலின் தரப்பினரோ எந்தவித ரியாக்சனும் காட்டாமல் அமைதி காத்து வருகின்றனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close