அதிரடி அரசியல்... டி.டி.வி.தினகரனை சந்தித்த மு.க.அழகிரி மகன்..?

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 27 Aug, 2018 05:24 am
action-politics-mk-azhagiri-s-son-who-met-ttv-dhinakaran

’அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை.. நிரந்தர நண்பனுமில்லை’ என்கிற சொற்றொடருக்கு இப்போது இன்னும் அழுத்தம் அதிகரித்து இருக்கிறது.

 

அரசியல் களத்தில் எதிரியை வீழ்த்த எவருடனும் கைகோர்க்கலாம் என்கிற ஃபார்முலாவை கையில் எடுத்திருக்கிறது அழகிரி தரப்பு. கட்சியில் இடம் கொடுக்க மறுக்கும் தனையன் ஸ்டாலினுக்கு எதிராக பல விதமான அஸ்திரங்களை தொடுக்க திட்டமிட்டு வருகிறார் மு.க.அழகிரி. 
அழகிரி தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறாரா? அல்லது மாற்றுக்கட்சியில் இணையப்போகிறாரா? என்கிற வாதம் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, அழகிரியின் மகன் துரை தயாநிதி, குற்றாலத்தில் அமமுக துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரனை ரகசியமாக சந்தித்துப்பேசியதாக கூறப்படுகிறது.

 

அழகிரி தனிக்கட்சி ஆரம்பிக்கும் பட்சத்தில் டி.டி.வி.தினகரனுடன் கூட்டணி அமைத்து  ஆட்சியில் பங்கு கொள்வது குறித்து அப்போது விவாதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கின்றனர் அழகிரி ஆதரவாளர்கள். 


அரசியல் களத்தில் எதுவும் நடக்கலாம் என்பதே தற்போதைய நிலை. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close