கறுப்பு கண்ணாடி, பேனாவால் கவனம் ஈர்க்கும் கருணாநிதி நினைவிடம்!

  திஷா   | Last Modified : 28 Aug, 2018 01:53 pm
kalaignar-s-memorial-has-decorated-with-sun-glass-and-pen

தி.மு.க-வின் பொதுக்குழுக் கூட்டம் இன்று காலை அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. செயல் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் இனி தலைவர் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் பட்டது. அதோடு கட்சியின் பொருளாளராக துரைமுருகனும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனால் ஸ்டாலினுக்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. ட்விட்டரில் கூட #DMKThalaivarStalin என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆகி வருகிறது. 

இந்நிலையில் மெரினாவில் அமைந்துள்ள கருணாநிதி இன்று புதுவிதமாக அலங்கரிக்கப் பட்டுள்ளது. கருணாநிதி என்றாலே அவருடைய கறுப்புக் கண்ணாடியும், அவரது எழுத்துகளும் தான் முதலில் நினைவுக்கு வரும். அதனால் நினைவிடத்தில் உள்ள அவரது படம் மலர்களால் அலங்கரிக்கப் பட்டுள்ள நிலையில், பெரிய கறுப்புக் கண்ணாடியும், பேனாவும் உடன் வைக்கப் பட்டுள்ளது. தி.மு.க தலைவராக ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளதை அடுத்து இந்த சிறப்பு அலங்காரம் செய்யப் பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close