பாஸ்கரனுடன் மிரட்டல்... திவாகரனிடம் சிக்கிய டி.டி.வி.தினகரனின் முக்கிய ரகசியம்..!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 30 Aug, 2018 04:14 am
dinakaran-s-important-file-about-ttv-dinakaran

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலரும் தனித்தனியாக கட்சி நடத்துவது இந்தியாவில் சசிகலாவின் குடும்பத்தினர் மட்டுமே. அவர்களுக்குள் நிகழ்ந்து வரும் மோதல், உள்ளடி வேலைகள் உச்சகட்டமடைந்து வருகிறது.

திருவாரூர் தொகுதியை குறி வைத்து சசிகலா உறவினர்களான அக்காள் மகன்களான டி.டி.வி.தினகரன், பாஸ்கரன், சகோதரர் திவாகரன் ஆகியோர் களமிறங்கியுள்ளனர்.  அமமுக கட்சியின் பொதுச்செயலாளராக சசிகலாவும், துணைப்பொதுச்செயலாளராக டி.டி.வி.தினகரனும் இருந்து வருகின்றனர். டி.டி.வி.தினகரனுடன் ஏற்பட்ட ஈகோ மோதலால் சசிகலாவின் சகோதரர் திவாகரன் அண்ணா திராவிடர் கழகம் என்கிற கட்சியை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், டி.டி.வி.தினகரனின் சகோதரர் பாஸ்கரன் இன்று காலை 10.30 மணிக்கு தனது கட்சியையும், கொடியையும் திருத்தணியில் அறிமுகம் செய்ய இருக்கிறார். என் வழி எம்.ஜி.ஆர் வழி என அரயல் பிரவேசத்தில் களமிறங்கி இருக்கிறார். இவர்களது அடுத்த டார்கெட்  திருவாரூர் தொகுதி. திருப்பரங்குன்றம் தொகுதி எம்.எல்.ஏ., ஏ.கே.போஸ் மரணமடைந்தார். திருவாரூர் தொகுதி எம்.எல்.ஏ.,வும் தி.மு.க தலைவராகவும் இருந்த கருணாநிதி மரணமடைந்ததால் இரு தொகுதிகளும் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த இரு தொகுதிகளுக்கும் விரைவில் இடைத்தேர்தல் நடக்க இருக்கின்றன. அடுத்து நாடாளுமன்றத் தேர்தல் வர இருப்பதால் இந்த இரு தொகுதிகளிலும் வென்றுவிட வேண்டும் என்பதில் அனைத்துக் கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன.

இந்நிலையில் கட்சி ஆரம்பித்துள்ள சசிகலா உறவினர்களில் திருப்பரங்குன்றம், திருவாரூர் இரு தொகுதிகளிலும் வெற்றிபெற வேண்டும் என டி.டி.வி.தினகரன் களமாடி வருகிறார். ஆனால், திவாகரன், பாஸ்கரனின் பார்வை திருவாரூர் தொகுதியை குறி வைத்துள்ளது. 
இந்நிலையில்,  திவாகரன் தரப்பினர், ‘எங்களுக்கு இது பரீட்சயமான தொகுதி. டி.டி.வி.தினகரன் இங்கு வெற்றிபெற இயலாது. ஆர்.கே.நகரில் டி.டி.வி.தினகரன் வெற்றிபெற்றதைப்போல இங்கு இயலாது. அங்கு எப்படி வெற்றிபெற்றார் என்கிற ரகசியம் எங்களுக்குத் தெரியும். அதனை இங்கு நிறைவேற்ற விடமாட்டோம். எங்களைப்பொறுத்தவரை மற்ற கட்சிகள் வெற்றிபெற்றாலும், டி.டி.வி.தினகரன் அணி வெற்றி பெற்று விடக்கூடாது’’ என்கிறார்கள்.

அதேபோல பாஸ்கரனுக்கும், தினகரனுக்கும் எப்போதும் பிடிக்காது. எதிரும் புதிருமாக செயல்படக்கூடியவர்கள். ஆகையால் பாஸ்கரன் தரப்பும் டி.டி.வி.தினகரன் அணியை தோற்கடிக்க முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகக் கூறுகிறார்கள். ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் பல கட்சிகளில் தொண்டர்களாக இருந்த நிலை மாறி, ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பல கட்சிகளின் தலைவர்களாக இருந்தல் இப்படிப்பட்ட குழிபறிகள் நடப்பது இயல்பானதே..! 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close