வலைவீசும் டி.டி.வி.தினகரன்... நமீதாவும், சிம்ரனும் சிக்குவார்களா..?

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 31 Aug, 2018 05:38 am
t-t-v-dhinakaran-to-dragnet-in-stars

கட்சியில் எத்தனைப் பெரிய பதவியில் நிர்வாகிகள் இருந்தபோதும் பிரச்சார நேரங்களில் கூட்டத்தை கூட்ட உதவுவது சினிமா நட்சத்திரங்களே.. 

தி.மு.க-விலும், அ.தி.மு.க.விலும் ஏகப்பட்ட திரை நட்சத்திரங்கள் கட்சிப்பணியாற்றி வந்துள்ளனர். மார்க்கெட் போன சினிமா நட்சத்திரங்களுக்குச் சினிமாவுக்கு அடுத்த புகலிடம் அரசியல். ஜெயலலிதா இருக்கும்போது ஏகப்பட்ட நடிகர், நடிகைகள் அ.தி.மு.க-வில் இருந்தனர். நடிகர்கள் ராமராஜன், குண்டு கல்யாணம், ஆனந்தராஜ், சூர்ய காந்த், தியாகு செந்தில், ரஞ்சித், நடிகை விந்தியா சி.ஆர்.சரஸ்வதி உள்ளிட்ட ஏகப்பட்டபேர் கட்சியில் இருந்து வந்தாலும் ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு அ.தி.மு.கவில் பிளவு ஏற்பட்ட பிறகு அரசியலில் இருந்து அவர்கள் ஒதுங்கி விட்டனர்.

 

ஜெயலலிதா மறைவுக்கு முன் கட்சியில் இணைந்த நடிகைகள் நமீதா, சிம்ரனும் கூட ஒதுங்கி விட்டனர். இந்நிலையில், தேர்தல் நெருங்கி வருவதால் சினிமா நட்சத்திரங்களை கட்சியில் இணைக்க முயன்று வருகிறார் டி.டி.வி.தினகரன். காரணம், அ.மமு.க.வில் நட்சத்திர பேச்சாளரும் அனைவரும் அறிந்தவருமாக இருப்பவர் டி.டி.வி.தினகரன் மட்டுமே. ஆகவே கட்சியில் திரைப்பட நட்சத்திரங்களை இணைத்து பிரச்சார நேரத்தில் கூட்டம் சேர்க்க முடிவு செய்துள்ளார். 

அதன்படி நடிகைகளான விந்தியா, சிம்ரன், நமீதா ஆகியோரைக் கட்சியில் இணைக்கப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. ஜெயலலிதா இருந்தபோது கட்சியில் சேர விருப்பம் தெரிவித்து காத்திருந்த நிலையில், கட்சியில் சினிமா நட்சத்திரங்களை இணைக்க பெரும் முயற்சி எடுத்து வருகிறார் டி.டி.வி.தினகரன். இசையமைப்பாளர் தீனா அமமுக கட்சியில் சமீபத்தில் இணைந்தார். அவரை வைத்தும் சினிமா நட்சத்திரங்களுக்கு வலைவீசி வருகிறார்கள் எனக்கூறப்படுகிறது. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close