சசிகலாவும் சிக்கணும்... அனுதாப ஓட்டும் விழணும்! எடப்பாடி பலே வியூகம்... கவலையில் டி.டி.வி.தினகரன்!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 12 Sep, 2018 08:41 am

edappadi-expects-arumugasamy-commission-to-charge-sasikala

ஜெயலலிதா மரணத்தில் சசிகலாவை சிக்க வைக்கும் நோக்கத்துடன் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் செயல்படுவதாக டி.டி.வி.தினகரன் தரப்பு கவலையடைந்து வருகிறது. 

ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள சந்தேகங்களை விசாரிக்க அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்தில் ஜெயலலிதாவின் தனிச் செயலாளராக இருந்த ராமலிங்கம் ஐ.ஏ.எஸ் அப்பல்லோ மருத்துவமனையின் தலைமை நிர்வாக அதிகாரி சுப்பையா விஸ்வநாதன் என அடுத்தடுத்து ஆஜராகி வாக்குமூலம் அளித்து வருகின்றனர். 

இந்த நிலையில், ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் கேட்கப்படும் கேள்விகள் எல்லாமே சசிகலாவை குற்றவாளியாக வெளிக்காட்ட வேண்டும் என்ற நோக்கத்துடன் மட்டுமே கேட்கப்படுவதாக ஆதங்கத்தில் இருக்கிறாராம் டி.டி.வி. தினகரன். ’’ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஆஜரானவர்களிடம் கேட்கப்படும் கேள்வி சசிகலாவை நோக்கியே இருக்கிறது. சசிகலாதான் எல்லாவற்றிற்கும் காரணம் எனச் சொல்ல வைத்துவிட வேண்டும் என்பது போலவே கேட்கிறார்கள். ஏதாவது ஒரு வகையில் அம்மாவின் மரணத்துக்குக் காரணம் சின்னம்மாதான் என்பதைச் சொல்லிவிட வேண்டும் என்ற குறிக்கோளுடன்தான் விசாரணை ஆணையம் செயல்படுகிறது. இந்த விசாரணை ஆணையத்தின் முடிவு என்பதும் அப்படித்தான் இருக்கும். விசாரணை ஆணையத்தின் முழுமையான அறிக்கை வரும் போது அது நிச்சயம் நமக்குப் பாதகமாகத்தான் இருக்கும்’ எனப் புலம்பி வருகிறாராம் டி.டி.வி.தினகரன். 

அதற்குத் தகுந்தாற்போல இன்னும் சில விஷயங்களும் கூறப்படுகின்றன. நாடாளுமன்ற தேர்தலுக்கு தேதி அறிவிக்கும் சில தினங்களுக்கு முன்பாக விசாரணை ஆணையத்தின் அறிக்கை வெளியாகும். அந்த அறிக்கை சசிகலா குடும்பத்துக்கு எதிரானதாக இருக்கும். தேர்தல் நெருங்கும் நேரத்தில் அப்படி ஒரு அறிக்கை வெளியானால் அது அ.தி.மு.கவுக்கு சாதகமாக இருக்கும். தேர்தலில், ‘அம்மாவின் மரணத்துக்குக் காரணமான சசிகலா குடும்பத்துக்கு வாக்களிக்கலாமா?’ என்பதையே எடப்பாடி அண்ட் கோ பிரசாரத்துக்குப் பிரதானமாகப் பயன்படுத்தும். 
அந்த வார்த்தைகள் நிச்சயமாக மக்களிடம் ஒரு அனுதாபத்தை ஏற்படுத்தும்.

அதை எப்படிச் சமாளிப்பது என்பதுதான் இப்போது தினகரன் வகையறாக்களின் கவலையாக இருக்கிறது. ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது எடுக்கப்பட்ட வீடியோக்களில் சிலவற்றை அந்த நேரத்தில் வெளியிடலாம் எனவும் சிலர் ஆலோசனை சொல்லியிருக்கிறார்கள். ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் முடிவு தேர்தல் நேரத்தில் வந்துவிட்டால் என்ன ஆகும் என்பதே இப்போது தினகரனின் திடீர் கவலையாக மாறியிருக்கிறது. 

- newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close