மு.க.ஸ்டாலினுக்கு சவாலாக இருப்பது டி.டி.வியா..? சிசிடிவியா..?

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 14 Sep, 2018 04:11 pm

challenge-to-m-k-stalin-ttv-or-cctv

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு சிசிடிவி கேமராக்கள் பெரும் சவாலாக இருப்பதாக சமூக வலைதளங்களில் மீம்ஸ்களை பதிவிட்டு ஏராளமானோர் கலாய்த்து வருகின்றனர். 

கடந்த மாதம் சென்னை விருகம்பாக்கம் பகுதியில் உள்ள பிரியாணிக்கடையில் ஓசியில் பிரியாணி கொடுக்க மறுத்த ஹோட்டல் ஊழியர்களை தி.மு.க பிரமுகர் ஒருவர் தாக்கினர். இது சிசிடிவி கேமராளவில் பதிவாகி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதனை அடுத்து சம்பவம் நடைபெற்ற ஹோட்டலுக்கு சென்று பாதிக்கப் பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார் மு.க.ஸ்டாலின். தாக்குதல் நடத்தியவர்களை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டனர்.  

இந்நிலையில், பெரம்பலூர் அருகே அழகுநிலையம் நடத்தி வரும் சத்யா என்பவரை பெரம்பலூர் முன்னாள் மாவட்ட  கவுன்சிலர் செல்வக்குமார் தாக்கிய வீடியோ காட்சியும் வெளியாகி தி.மு.க-விற்கு சங்கடத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளதாக தி.மு.க செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார்.

அடுத்தடுத்த சம்பவங்கள் சிசிடிவி கேமராக்களில் பதிவாகி வெளிவந்து கொண்டிருப்பது குறித்த கருத்துக்களும் மீம்ஸ்களும் சமூகவலைதளங்களில் பரவலாக பதிவிடப்பட்டு வருகின்றன.

’தி.மு.க முப்பெரும் விழா மு.க.ஸ்டாலின் அழைப்பு. அனைத்து தி.மு.க-வினரும் இனிமேல் சிசிடிவி கேமரா இல்லாத இடம் பார்த்து ரகளையில் ஈடுபடுமாறு இந்தக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது’ என்கிறது ஒரு பதிவு. 

’திராவிடர்களை அழைக்க ஆரியர்கள் கண்டுபிடித்த வஸ்துவே சிசிடிவி’’ எனக்கூறப்பட்டுள்ளது. 

’’இப்போதெல்லாம் சிசிடிவி கேமராவை பார்த்தாலே மு.க.ஸ்டாலின் மப்புக்கடிதம் எழுதிக் கொடுத்து விடுகிறாராம்’’ என கலாய்த்துள்ளனர். 

வளர்த்தது சன் டிவி, அழித்தது சிசிடிவி, கள்ளவுறவு டிடிவி எனவும் பதிவிட்டுள்ளனர். 

வரும் காலங்களில் அரசியலில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு சவாலாக இருப்பது மக்கள் செல்வர் டிடிவியா? அல்லது வணிக நிறுவனங்களில் சிசிடிவியா? என பட்டிமன்றத் தலைப்பிட்டு திண்டுக்கள் ஐ.லியோனி புகைப்படத்தை வைத்து மீம்ஸ் போட்டு வருகின்றனர். 

சிசிடிவி கேமரா சம்பவங்களை வைத்து ஆயிரக்கணக்கான பதிவுகள் சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டு பரவி வருகின்றன.

- newstm.in

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close