தமிழிசையை பின் தொடர்வதை தவிர்த்த டி.டிவி.தினகரன்!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 14 Sep, 2018 04:30 pm

t-t-v-dhinakaran-who-avoids-following-tamilisai

பா.ஜ.க தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனை டிவிட்டரில் பின் தொடர்வதை திடீரென தவிர்த்துள்ளார் டி.டி.வி.தினகரன். 

ப.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும், அமமுக துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனும் சமூகவலைதளங்களில் தங்களது கருத்துக்களையும், அறிக்கைகளையும் வெளியிட்டு ஆக்டிவாக இருந்து வருகின்றனர். அதிமுக-வை எடப்பாடி, ஓ.பன்னீர்செல்வம் அணியிடம் பிடுங்கிக் கொடுத்ததே பாஜகதான். சசிகலாவை ஜெயிலுக்கு அனுப்பியது, இரட்டை இலைச்சின்னம் தங்களுக்கு கிடைக்காமல் செய்தது. எடப்பாடி தலைமையிலான ஆட்சியை கவிழவிடாமல் தடுப்படுது என பல்வேறு விஷயங்களில் பாஜகவுடன் வேறுபட்டு நிற்கிறார் டி.டி.வி.தினகரன்.

பாஜகவுடன் இனி எப்போதும் கூட்டணியே கிடையாது என பகிரங்கமாகவே அறிவித்தார் டி.டி.வி.தினகரன். இந்த நிலையில், ட்விட்டர் பக்கத்தில் டி.டி.வியை 68 ஆயிரத்து 700 பேர் பின் தொடர்ந்து வருகின்றனர். ஆனால், டிடிவி யாரையும் பின் தொடரவில்லை. இந்நிலையில், இன்று அவரது பக்கத்தில் இருந்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனை மட்டும் பின் தொடர்ந்து இருந்தார்.

இதனையறிந்த இணையதளவாசிகள் இந்தத் தகவலை ’அம்மா, சின்னம்மாவை பின்தொடருகிறேன் என்று சொல்லும் டி.டி.வி.தினகரன் பின் தொடரும் ஒரே நபர் தமிழிசை மட்டுமே’ எனக் கருத்துத் தெரிவித்து வேகமாக பரப்பி வந்தனர். இதனையடுத்து, உடனடியாக தமிழிசையை பின்தொடர்வதை விலக்கிக்கொண்டுள்ளார் டி.டி.வி.தினகரன்.

- newstm.in

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close