சீமான் மச்சானை களமிறக்கும் டி.டி.வி.தினகரன்... திருப்பரங்குன்றம் திகுதிகு..!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 21 Sep, 2018 03:55 am
ttv-dhinakaran-eyes-seeman-s-brother-in-law-as-by-election-candidate

திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் சீமான் மைத்துனர் டேவிட் அண்ணாத்துரையை களமிறக்க அமமுக துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலைப்போல, திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தலில் அதிரடி வெற்றிகளை ருசிக்க வேண்டும் என கச்சை கட்டி களத்தில் தொண்டர்களை இறக்கி உள்ளார் டி.டி.வி.தினகரன். தி.மு.க, திணற, அ.தி.மு.க அதிர, தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளார் டி.டி.வி. இந்த நிலையில், இரு தொகுதிகளிலும் வலுவான வேட்பாளர்களை களமிறக்கத் தயாராகி விட்டார் அவர். திருப்பரங்குன்றத்தில் அதிமுக முன்னாள் சட்டப்பேரவை தலைவரும், மறைந்த முன்னாள் அமைச்சருமான காளிமுத்துவின் மகன் டேவிட்  அண்ணாத்துரையை களமிறக்கத் திட்டமிட்டுள்ளார். 1977, 1980 ஆகிய ஆண்டுகளில் நடந்த தேர்தலில் திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட்டு காளிமுத்து வெற்றி பெற்றார். காளிமுத்துவின் அனுகுமுறையும், பணிவும் திருப்பரங்குன்றம் தொகுதியில் இன்றளவும் போற்றப்படுவதாக கூறுகிறார்கள்.

 அதோடு முக்குலத்தோர் வாக்குகளே திருப்பரங்குன்றம் தொகுதியில் வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகிறது.  அந்த வகையிலும் காளிமுத்துவின் மகன் டேவிட் அண்ணாத்துரைக்கு டி.டி.வி.தினகரன் முக்கியத்துவம் அளிக்கத் துவங்கியுள்ளார்.  காளிமுத்துவிற்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி நிர்மலா. இவர்களது மகன்கள் டேவிட் அண்ணாத்துரை, ராஜன். மகள்கள், புனிதா, ரோஷி, வேதா. 2-வது மனைவி மனோகரி. இவர்களது மகன்கள் மணிகண்டன், அருள்மொழிதேவன். மகள்கள் அமுதா, கயல் விழி. 

காளிமுத்துவின் இரண்டாவது மனைவிக்கு பிறந்த கயல்விழி, நாம் தமிழர் கட்ச்யின் ஒருங்கிணைப்பாளர் சீமானை திருமணம் செய்து கொண்டுள்ளார்.  அந்த வகையில் சீமானுக்கு மச்சான் இந்த டேவிட் அண்ணாதுரை. அடுத்து திருவாரூர் தொகுதியில் குடவாசல் ராஜேந்திரன், கடலைக்கடை பாண்டி, நகர் மன்ற முன்னாள் சேர்மன் ரவிச்சந்திரன் ஆகிய மூவரில் ஒருவருக்கு சீட் கொடுக்கத் திட்டமிட்டுள்ளார் டி.டி.வி.தினகரன். டேவிட் அண்ணாதுரை அமமுகவின் இளைஞரணி செயலாளராகவும் இருந்து வருகிறார். மதுரை மாவட்ட பஞ்சாயத்து தலைவராகவும் ஏற்கெனவே வெற்றி பெற்றுள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close