நடிகை நிலானி விவகாரம்... விசாரணை வளையத்தில் உதயநிதி ஸ்டாலின்!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 21 Sep, 2018 03:56 am
actress-nilani-affair-udhayanidhi-stalin-at-the-centre-of-probe

சின்னத்திரை நடிகை நிலானி திருமணம் செய்வதாகக்கூறி ஏமாற்றியதால் தற்கொலை செய்து கொண்டார் உதவி இயக்குநரான காந்தி லலித் குமார். இந்த நிலையில், நேற்று நடிகை நிலானியும் கொசு மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். இந்த விவகாரத்திற்கு பின்னணியில் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதியின் பெயரும் அடிபடத் தொடங்கி உள்ளது.

காந்தி லலித்குமாருக்கு சொந்த ஊர் திருவண்ணாமலை. உதயநிதி ரசிகர் மன்றத்தில் முக்கிய பொறுப்பில் இருந்தவர். உதயநிதி பெயரை பயன்படுத்திதான் சினிமா வாய்ப்பு வாங்கித் தருவதாக பல பெண்களை ஏமாற்றியிருக்கிறார் காந்தி என்பது நிலானியின் புகார்.
அதேபோல திமுக கூட்டங்களில் பேசுவதற்கு வாய்ப்பு வாங்கித் தருவதாகவும் சொல்லி நிலானியிடம் டீல் பேசியிருக்கிறார் காந்தி லலித்குமார். இந்த விவகாரத்தில் காந்திக்கு ஆதரவாக யாரும் இதுவரை புகார் கொடுக்கவில்லை. அதனால் நிலானி மீது காவல் துறையும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஏற்கெனவே 5 முறை காந்தி மீது நிலானி புகார் கொடுத்திருக்கிறார். அப்பொழுதெல்லாம் இரு தரப்பையும் அழைத்து சமாதானம் பேசித்தான் அனுப்பியிருக்கிறது காவல் துறை.

காந்தியும், நிலானியும் பேசிக்கொண்ட செல்போன் பேச்சுக்கள் முழுவதும் இப்போது காவல் துறை கையில் இருக்கிறது. அதில் பல இடங்களில், திமுகவின் பெயரையும் உதயநிதி பெயரையும் பயன்படுத்தி இருக்கிறாராம் காந்தி. இதை வைத்து, உதயநிதியை விசாரணைக்கு அழைக்கலாமா என காவல் துறையில் ஆலோசனை நடந்திருக்கிறது. திமுக பெயரை சொல்லியும், உதயநிதி பெயரைச் சொல்லியும்தான் ஏமாற்றினார் காந்தி என புகார் கொடுக்கச் சொல்லி நிலானியிடம் சிலர் பேசியிருக்கிறார்கள். ஆனால், அவரோ அதற்கு மறுத்துவிட்டாராம். ‘என்கிட்ட இருக்கிற எல்லா ஆடியோ ஆதாரங்களையும் நான் கொடுத்துடுறேன். ஆனால் நான் யாரு மீதும் புகார் கொடுக்க தயாராக இல்லை..’ என்று சொல்ல... ‘நீங்க ஆடியோ தரவே வேண்டாம். எல்லா ஆடியோவும் எங்க கையில் இருக்கு...’என போலீஸ் தரப்பில் சொல்லப்பட்டு இருக்கிறது.

இந்த விவகாரம் முதல்வர் கவனத்துக்குப் போனதும், ‘புகார் இல்லாமல் யாரையும் விசாரணைக்கு கூப்பிட வேண்டாம். ஏற்கெனவே ஸ்டாலின் நம்ம மேல கடுமையான கோபத்துல இருக்காரு. இது, அவரோட பையனை விசாரணைக்கு கூப்பிட்டா அது இன்னும் சிக்கலை உண்டாக்கிடும். புகாராக வந்தால் பார்த்துக்கலாம். அதுவரைக்கும் எந்த நடவடிக்கையும் வேண்டாம்..’ என ஸ்ட்ரிக்ட்டாகச் சொல்லிவிட்டார் எனக்கூறப்படுகிறது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close