மு.க.அழகிரி மிரட்டல்... இடைத்தேர்தலை புறக்கணிக்க மு.க.ஸ்டாலின் முடிவு?

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 21 Sep, 2018 03:56 am
m-k-azhagiri-s-threat-m-k-stalin-to-boycott-the-by-election

திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல்களில் திமுகவினரின் களப்பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், தி.மு.க இந்த இடைத்தேர்தர்களை புறக்கணிக்க வாய்ப்புள்ளதாக கழக உடன்பிறப்புகள் குழப்பத்தில் உள்ளனர். 

 இடைத்தேர்தல் களப்பணியில் முன்னணியில் இருப்பது டி.டி.வி.தினகரனின் அமமுக முதலிடத்தில் இருக்கிறது. ஆர்,கே.நகரை போல வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்பதில் குறிக்கோளாய் இருந்து வருகிறார். அப்படி தினகரன் அணி திருப்பரங்குன்றம், திருவாரூரில்  வெற்றி பெற்றுவிட்டால் அது திமுகவுக்கு மிகப்பெரிய பின்னடைவாக இருக்கும். பொதுவாக இடைத்தேர்தல்கள் என்றால் ஆளுங்கட்சிதான் வெற்றி பெறுவதே வாடிக்கை. ஆனால், ஆர்.கே.நகரில் சுயேட்சையாக நின்று அ.தி.மு.க- தி.மு.க-வுக்கு அதிர்ச்சி கொடுத்தார் டி.டி.வி. அதேபோல் மீண்டும் நிகழ்ந்து விடக்கூடாது என்பதில் இரு தரப்பும் கவலையாகிக் கிடக்கின்றன. 

ஏற்கனவே ஆர்.கே.நகரில் வரலாறு காணாத தோல்வியடைந்த  திமுக மூன்றாமிடத்துக்கு தள்ளப்பட்டு டெபாசிட் இழந்தது. இந்த நிலையில் தான் இடைத்தேர்தலை தவிர்த்து விட்டு பொதுத்தேர்தலில் களமிறங்க ஸ்டாலின் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளிவரத்தொடங்கி உள்ளன. இதற்கு மு.க.அழகிரியின் மிரட்டலும் ஒரு காரணம் எனக்கூறப்படுகிறது. ஒருவேளை திருவாரூரில் திமுக ஒருபுறமும், அழகிரி மறுபுறம் என போட்டியிட்டால் கருணாநிதி குடும்பத்திற்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தும். 

தமிழகத்தில் தற்போது மிக மிக பலமான கட்சி திமுக. அதிக அளவு மூத்த தலைவர்களையும், சிறந்த அனுபவங்களை பெற்ற நிர்வாகிகளையும் கொண்டது திமுக. இவர்களுடன் ஒப்பிடும்போது அதிமுகவில் இருக்கும் முதலமைச்சர் உட்பட எல்லோருமே திமுகவுக்கு கத்துக்குட்டிகள்தான். அழகிரி விஷயம் தணிந்த பிறகும் கட்சி நடவடிக்கைகளில் ஸ்டாலின் தீவிரமாக இறங்கவில்லை என்றே அறியப்படுகிறது. ஆர்.நகரைப்போல இரு தொகுதிகளையும், தட்டிப்பறிப்பாரா? இல்லை விட்டுக் கொடுப்பாரா? என குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர் கழக உடன்பிறப்புகள். 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close