பயத்தில் வெளிநாட்டு காரை மறைத்து... பணத்தை பதுக்கிய கருணாஸ்!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 23 Sep, 2018 12:25 am
karunas-hid-the-money-in-the-car-in-fear

தான் நடத்தி  வரும் முக்குலத்தோர் புலிப்படை அமைப்பினரால் தொந்தரவுகளைத் தவிர்க்க வெளிநாட்டுக் காரையும், தன்னிடம் இருக்கும் பணத்தையும் கருணாஸ் பதுக்கி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.  

முதலமைச்சர், காவல்துறை அதிகாரிகள், மற்றும் பிறசாதியினரை தாக்கிப்பேசிய கருணாஸ் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக மீடியாக்களிடம் பேசுவதை வலுக்கட்டாயமாக தவிர்த்து வந்தார் கருணாஸ். ஆனால், அவ்வப்போது சாலிக்கிராமம் பகுதிகளில் ஏதாவது ஒரு கல்யாண மண்டபத்தை பிடித்து தனது கட்சியினரை சந்தித்துப் பேசுவதை வாடிக்கையாக வைத்திருந்தார். ஆனால், மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் தாமோதர கிருஷ்ணன், மாநில வழக்கறிஞர்கள் பிரிவு செயலாளர் கோகுல கிருஷ்ணன் ஆகியோரைத் தாண்டி தன்னிடம் அவரது அமைப்பினரை நெருங்கவிடுவதில்லை என்கிற குற்றச்சாட்டு எழுந்து வந்தது.

முன்பு நம்பிக்கை வாக்கெடுப்பில் சசிகலா தரப்பிற்கு சட்டப்பேரவையில் வாக்களிக்க கருணாஸ் 5 கோடி ரூபாயும், கூவாத்தூரில் எம்.எல்.ஏக்களை தங்க வைக்க ஏற்பாடு செய்ததாற்காக தனியாக சசிகலாவிடமிருந்து 1 கோடி ரூபாயும் பெற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது.

இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தே  முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் பொதுச்செயலாளராக இருந்த பாண்டித்துரை, துணைத் தலைவராக இருந்த சந்தானகுமார் ஆகியோர் அமைப்பை விட்டு வெளியேறினர். அந்தப்பணத்தில் தங்களுக்கும் பங்கு வேண்டும் எனக் கேட்டதால் அவர்களை வெளியேற்றினார் கருணாஸ். 

அப்படி யாரும் இப்போதும் தன்னிடம் பங்கு கேட்டு விடக்கூடாது என்பதால் அவர் தனது அமைப்பின் உறுப்பினர்களை சந்திக்கும்போது, யாரும் என்னிடம் பண உதவி எதிர்பார்த்து வராதீர்கள். நான் இப்போது உங்களை சந்திக்க வருவதற்கே கடன் பெற்றுதான் இந்த ஏற்பாடுகளை செய்து தந்திருக்கிறேன். நான் முன்பு எவ்வளவு நகைகளை அணிந்திருப்பேன் என்று உங்களுக்கே தெரியும். இப்போது அத்தனையும் அடகு கடையில் இருக்கிறது. பல வெளிநாட்டுக் கார்களை வைத்திருந்தேன். இப்போது நான் பயன்படுத்துவது சாதரண கார்தான். நான் சம்பாதித்த சொத்துக்கள் அத்தனையையும் விற்றுத்தான் திருவாடனை தொகுதியில் ஜெயித்தேன். அங்கு மூன்று கோடி பணம் செலவானது. அத்தனையும் வட்டிக்கு வாங்கி செலவழித்த பணம்.

 

என்னிடம் பணம் கேட்டு இப்போது வருபவர்கள், திருவாடனை தொகுதியில் கடன் வாங்கி நான் போட்டியிட்டபோது பண உதவிகள் செய்தார்களா? பிறகு இப்போது என்னிடம் உதவி கேட்டு எந்த அடிப்படையில் வருகிறீர்கள்? ஒரே சாதியாய், ரத்த உறவாய் அமைப்பாய் இருந்தாலும் வாயும் வயிறும் வேறுவேறு. என்னிடம் பண உதவி எதிர்பார்க்கும் யாரும் இந்த அமைப்பில் இருக்க வேண்டாம். ஆனால், இந்த அமைப்பை வளர்க்க பணம் தேவைப்படுகிறது. அதை திரட்டித் தருவது உங்கள் கடமை. இந்த அமைப்பை வளர்த்தால் நாளை இதன் மூலம் நீங்கள் பதவி பெறலாம். எம்.எல்.ஏ, அமைச்சர் ஆகலாம். அடுத்து கோடி கோடியாய் சம்பாதிக்கலாம்’’ என சர்க்கரையாகப் பேசுவாராம் கருணாஸ்.

 

கூட்டம் முடிந்த பிறகு தமோதரனிடமும், கோகுல கிருஷ்ணனிடமும் தனியாகப்பேசும் கருணாஸ், ’பில்லக்காய்ப் பசங்க இப்படி சொன்னால்தான் நம்புவாய்ங்க. சின்னம்மா கொடுத்த பணம் எல்லாம் பத்திரமாத்தான் இருக்கு. எனக்கு கொடுத்த பணத்தை இவன்களுக்கு எதுக்கு செலவழிக்கணும்? வெளிநாட்டுக் கார் வீட்டில் இருந்தால் நான் வசதியாக இருக்கிறேன் என நினைத்துக்கொண்டு அடிக்கடி உதவி கேட்டு வருவார்கள். அதனால்தான் பலகோடி ரூபாய் மதிப்பிலான அந்தக்காரை இதே சாலிக்கிராமம் ஏரியாவில் பதுக்கி வைத்திருக்கிறேன்’’ எனக்கூறுவார் என்கிறார்கள்.

முக்குலத்து புலிப்படை அமைப்பில் புதிதாக சேரும் உறுப்பினர்களிடம் வசூல்வேட்டை நடத்துவதால் இணைந்த வேகத்திலேயே அந்த அமைப்பை விட்டு வெளியேறியவர்களே அதிகம் என்கிறார்கள். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close