சாதி வாக்குகளுக்காக கருணாஸை தூண்டிவிடும் டி.டி.வி.தினகரன்?

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 22 Sep, 2018 07:32 am
ttv-dhinakaran-to-trigger-karunas-for-casting-votes

சட்டப்பேரவை உறுப்பினர் கருணாஸின் பேச்சு தமிழகம் முழுவதும் பரபரப்பை பற்ற வைத்து விட்டது. இதன் பின்னணியில் டி.டி.வி.தினகரன் இருப்பதாக கூறுகிறார்கள். 

காவல்துறையினரையும், முதல்வரையும் தாக்கிப்பேசியதால் நடிகரும், திருவாடனை சட்டப்பேரவை உறுப்பினருமான கருணாஸ் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் தலைமறைவாகி விட்டார் என்று கூறப்பட்ட நிலையில், தடாலடியாக மீடியாவை சந்தித்து ‘நான் எங்கும் ஓடி ஒழிந்து விடவில்லை. எதையும் எதிர்க்கொள்ளத் தயார்’’ என சாலிகிராமம் வீட்டிலிருந்தபடியே பேட்டியளித்தார். தான் பேசிய பேச்சிற்கு பட்டும், படாலும் மன்னிப்பும் கோரினார்.

8 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட பிறகும் தலைமறைவாகாமல், அதைவிட முக்கியமாக இதுவரை கருணாஸ் கைது செய்யப்படாமல் இருப்பதன் பின்னணியில் அமமுக துணை பொதுச்செயலாளர் தினகரனின் தலையீடு இருப்பதாகக் கூறப்படுகிறது.  இதுகுறித்து முக்குலத்தோர் புலிப்படை முக்கிய நிர்வாகி ஒருவர் நம்மிடம், ‘’கருணாஸ் அண்ணன்  சில மாதங்களாக மீடியாவை சந்திப்பதையே தவிர்த்து வந்தார். இப்போதுதான் மீடியாக்களை சந்திக்க ஆரம்பித்திருக்கிறார். ஆனால், இப்படி காரசாரமாக அவர் பேசுவார் என்பதை நாங்களே எதிர்பார்க்கவில்லை. 8 வழக்குகள் பதிந்திருந்தாலும் அவர் அச்சப்படவில்லை. அண்ணனை கைது செய்தால் அடுத்த நிமிடமே எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி கவிழ்ந்துவிடும் என்பதை கருணாஸ் நம்புகிறார். அதனால்தான் அவர் தலைமறைவாக இல்லாமல் தில்லாக மீடியாக்கள் முன் தோன்றி வருகிறார்’’ என்கிறார் அவர். 

டி.டி.வி.தினகரனுக்கு மறைமுகமாக ஆதரவு கொடுத்து வரும் ஒருசில அமைச்சர்கள்  கருணாஸை கைது செய்ய எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. ஸ்டாலின் கூட்டிய மாதிரி சட்டமன்றத்தில் பேசிய கருணாஸ், அங்கு ‘ கூவாத்தூர் ரகசியங்களை புட்டுப்புட்டு வைக்கட்டுமா... என உரக்க முழங்கினார்’’ அப்படிப்பட்ட கருணாஸுக்கு டி.டி.வி.தினகரன் ஏன் ஆதரவாக இருக்க வேண்டும்? ’’கருணாஸுக்கு சீட் கிடைக்கக் காரணம் சசிகலா. தேர்தல் சமயத்தில் சசிகலா குடும்பமே கருணாஸுக்கு நிதிஉதவி செய்து வெற்றிபெருவதற்கு காரணமாக இருந்தது. ஜெயலலிதா ஆட்சியில் தொடர்ந்திருந்தாலோ, அல்லது சசிகலா முதலமைச்சராகி இருந்தாலோ  நிச்சயமாக கருணாஸ் அமைச்சராகி இருப்பார். அந்த அளவிற்கு சசிகலாவின் ஆதரவு கருணாஸிற்கு இருந்தது. 

ஆதரவு எம்.எல்.ஏக்களை கூவாத்தூரில் பாதுகாக்கும் பொறுப்பை கருணாஸிடம் ஒப்படைத்தார் சசிகலா.  பெயருக்கு முக்குலத்தோர் புலிப்படை என்கிற பெயரில் இயங்கி வந்தாலும் கருணாஸ் சசிகலாவின் தீவிர விசுவாசியாகி விட்டார். இதனை அமைப்பாக மட்டுமே நடத்துவேனே தவிர கட்சியாக ஒருபோதும் மாற்ற மாட்டேன் என சசிகலாவிடம் கருணாஸ் வாக்குறுதி அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், டி.டி.வி.தினகரனின் கட்சியில் உள்ள ஆதரவாளர்களில் முக்குலத்தோரே இருப்பதாக ஒரு பிம்பம் எழுந்து வருகிறது. அதனைத் தவிர்த்து அனைத்து சாதியினரும் விரும்பக்கூடிய தலைவராக தன்னை பிரதிபலிக்க நினைக்கிறார் தினகரன். அதன்படி சமீபத்தில் நடந்த இம்மானுவேல் சேகரன் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார். இதனால் கோபமடைந்த அமமுக நிர்வாகிகள் தினகரனை விமர்சித்தனர். இதனால், அவர்களை தினகரன் கட்சியில் இருந்து நீக்கிய சம்பவமும் நடந்தது. 

ஆகவே முக்குலத்தோரை ஒன்று திரட்டும் அசைண்மெண்டை தினகரன், கருணாஸிடம் ஒப்படைத்திருக்கிறார். தனது சாதி இளைஞர்களை ஈர்க்கவே கருணாஸ் இப்படி உணர்ச்சிவசமாகப் பேசிவிட்டார்’’ என்கிறார்கள் முக்குலத்து புலிப்படை நிர்வாகிகள். 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close