மனைவி மகனுக்கு கல்தா... துணைவி மகனுக்கு பதவி... குடும்பத்திற்குள் ‘கலகத்தை’ மூட்டிய ஸ்டாலின்..!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 23 Sep, 2018 02:03 am
stalin-who-closed-the-rebellion-within-the-family

மறைந்த முன்னாள் அமைச்சர் சேலம் வீரபாண்டி ஆறுமுகத்தின் முதல் மனைவி, மகன் ராஜாவுக்கு கல்தா கொடுத்து விட்டு இரண்டாவது மனைவி மகன் பிரபுவுக்கு தி.மு.க.வில் ஸ்டாலின் முன்னுரிமை கொடுத்து வருவது அவர்களது குடும்பத்தில் குமைச்சலை ஏற்படுத்தி இருக்கிறது. 

தி.மு.க ஆட்சிக்காலத்தில் மூன்று முறை வேளாண்துறை அமைச்சராகவும், சேலம் மாவட்டசெயலாளராக பல ஆண்டுகாலம் பணியாற்றியவர் வீரபாண்டி ஆறுமுகம். தி.மு.க கட்சிப்பொதுக்குழுவில் துணிச்சலாக தவறுகளை சுட்டிக்காட்டுவார் வீரபாண்டி ஆறுமுகம். இதனால், ஸ்டாலினுக்கு ஆரம்பத்திலிருந்தே அவரை பிடிக்காது. கடந்த 2012ம் ஆண்டு உடல் நலக்குறைவால் காலமானார் வீரபாண்டி ஆறுமுகம். அவர் இறந்துவிட்டாலும் அரவர்து மகன் ராஜாவையும் , அவரது ஆதரவாளர்களையும் இப்போதுவரை ஒதுக்கி வைத்திருந்தது ஸ்டாலின் தரப்பு. ராஜாவை கடந்த மூன்று ஆண்டுகளாகவே சேலம் கிழக்கு மாவட்ட பொறுப்பாளராகவே வைத்திருந்தார்கள்.  

                                                                                               வீரபாண்டி ஆ.ராஜா

மத்திய மாவட்டப் பொறுப்பாளர் பனைமரத்துப்பட்டி ராஜேந்திரன்தான் ஸ்டாலினுக்கு நெருக்கம். சேலத்தில் எந்தத் தகவல் என்றாலும் அது ராஜேந்திரன் மூலமாகத்தான் கடந்த சில நாட்கள் வரை ஸ்டாலின் கவனத்துக்கு வந்தது. அதேபோலக் கட்சியிலிருந்து தகவல் சொல்வதாக இருந்தாலும் அது ராஜேந்திரன் மூலம்தான் சேலத்துக்குச் சொல்லப்படும். இதுதான் இதுநாள் வரை நடைமுறையாக இருந்தது.

ஆனால் இப்போது மீண்டும் வீரபாண்டி ஆறுமுகத்தின் வாரிசுக்கு முக்கியத்துவம் கொடுக்கத்துவங்கியுள்ளார் ஸ்டாலின்.  ஆனால், ராஜாவுக்கு அல்ல. வீரபாண்டி ஆறுமுகத்தின் இரண்டாவது மனைவிக்கு பிறந்த பிரபுவை முன்னிலைப்படுத்த தொடங்கியுள்ளார் ஸ்டாலின்.

வீரபாண்டி ஆறுமுகத்தின் துணைவியார் லீலாவதி. அதாவது வீரபாண்டியாரின் இரண்டாவது மனைவி. இவர்களது மகன் டாக்டர் பிரபு. வீரபாண்டியார் மறைவுக்குப் பிறகுதான் திமுகவில் தலைகாட்ட ஆரம்பித்தார் பிரபு. சென்னையில் வசிப்பதால் அடிக்கடி அறிவாலயம் வருவதும் போவதுமாக இருந்தார். வீரபாண்டியாரின் சாயல் அப்படியே பிரபுவுக்கு இருக்கும். வீரபாண்டியார் குடும்பத்தை ஆரம்பத்திலிருந்தே ஸ்டாலின் ஒதுக்கிவந்தாலும், பிரபுவிடம் மட்டும் கொஞ்சம் நெருக்கம் காட்டிவந்தார். கருணாநிதி மறைவுக்குப் பிறகு அந்த நெருக்கம் இன்னும் அதிகமாகியிருக்கிறது. முன்பு அவ்வப்போது அறிவாலயத்துக்கும் செனடாப் ரோட்டுக்கும் வந்த பிரபு, இப்போது அடிக்கடி வருகிறார்.

சமீபகாலமாக சேலம் மாவட்ட நிர்வாகிகள் யார் ஸ்டாலினைச் சந்திக்க வந்தாலும், 'பிரபுவைக் கூப்பிடுங்க...'. என்கிறாராம் ஸ்டாலின்.

வீரபாண்டியாரின் மூத்த மகன் ராஜாவே அண்மைக் காலமாக பிரபு இல்லாமல் ஸ்டாலினைச் சந்திப்பதே இல்லை. கடந்த சில தினங்களுக்கு முன்பு சேலம் வந்த ஸ்டாலினுக்கு மாவட்ட எல்லையில் வரவேற்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. அங்கே பிரபுவும் இருந்தாராம். அவரைப் பார்த்ததும், 'நீங்க எங்கே இங்கே வந்தீங்க?' என விசாரித்திருக்கிறார் ஸ்டாலின். கட்சிக்காரர்களே ஸ்டாலினுக்கும் பிரபுவுக்கும் உள்ள நெருக்கத்தைப் பார்த்துக் கொஞ்சம் மிரண்டுவிட்டார்களாம்.

இது மட்டுமல்ல திமுக தரப்பில் இன்னொரு தகவலும் ஓடுகிறது. 'வீரபாண்டியாருக்குப் பிறகு சேலம் மாவட்டத்தை வழிநடத்தச் சரியான நபர் இல்லை என்பதைத் தளபதியும் நன்றாகவே உணர்ந்துகொண்டார். அதுவும் எடப்பாடியை எதிர்த்து நிற்க சேலத்தில் ஒரு ஸ்ட்ராங்கான ஆள் வேண்டும் எனக் கணக்குப் போடுகிறார். அதுவும் அந்த நபர் வீரபாண்டியார் குடும்பத்திலிருந்து வந்தால் அது மக்களிடம் வரவேற்பைப் பெறும் என்று ஸ்டாலின் கணக்கு போடுகிறார். நாடாளுமன்றத் தேர்தல் வரும்போது பிரபுவுக்கு சேலத்தைக் கொடுத்தால் என்ன, என்பது வரை ஆலோசிக்கப்பட்டதாம்.

மாவட்ட நிர்வாகங்களுக்குச் சில தகவல்கள் இப்போது பிரபு மூலமாகவும் சொல்லப்பட்டிருக்கின்றன. ’மாசத்துல 10 நாளாவது இனி சேலத்தில் இருங்க’ என்றும் பிரபுவுக்குச் சொல்லப்பட்டிருக்கிறது. அதனால் பிரபுவின் தலையும் சேலத்தில் அதிகமாகவே தென்பட ஆரம்பித்திருக்கிறது. இது சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் பதவிக்காக காத்திருந்த ராஜாவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. 

                             வீரபாண்டி ஆறுமுகத்துடன் டாக்டர் பிரபு 

ராஜாவை ஒதுக்கி விட்டு பிரபுவுக்கு ஸ்டாலின் முக்கியத்துவம் கொடுக்க காரணம், ராஜாவின் மூத்த சம்பந்தி இளவரசன், இரண்டாவது சம்பந்தி நீலா ஜெயக்குமார் எனக்கூறப்படுகிறது. ராஜாவின் நெருங்கிய உறவினர்களான இவர்கள் ரஜினி மக்கள் மன்றத்தின் பொறுப்பாளர்களாக கடந்த சில மாதங்களாக இருந்து வருகிறார்கள். சேலம், மற்றும் கடலூர் மாவட்டங்களின் பொறுப்பாளர்களாக இயங்கி வருகிறார்கள்.

குறிப்பாக டாக்டர் இளவரசன் ரஜினியின் நம்பிக்கைக்கு உரியவராக இருப்பவர். இவர் சமீபகாலமாக தமிழகம் முழுவதும் ரஜினி மக்கள் மன்றத்திற்காக சுற்றுப்பயணம் மேற்கொண்டு கள நிலவரங்களை ரஜினிக்கு பாஸ் செய்து வருகிறார். இந்த அதிருப்தியால்தன்  ராஜாவை ஸ்டாலின் ஒதுக்கி வைப்பத்தாக  காரணம் கூறுகிறார்கள் சேலம் மாவட்ட உடன்பிறப்புகள். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close