புலி வாலைப் பிடித்த கருணாஸ்... மீள்வாரா..? வீழ்வாரா?

  பா.பாரதி   | Last Modified : 24 Sep, 2018 06:40 pm
karunas-with-tiger-tailings-come-back

நாயர் புலி வாலை பிடித்தாரா என்பது தெரியாது. ஆனால் காமெடி நடிகர் கருணாஸ், புலி வாலை பிடித்திருப்பது நிச்சயம்.

சினிமாவில் ஏதோ வண்டி ஓட்டிக் கொண்டிருந்தவருக்கு அரசியல் ஆசை ஏற்பட்டு முக்குலத்தோர் புலிப்படை என்ற பெயரில் அமைப்பை  ஆரம்பித்தார். சசிகலா தயவில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்று திருவாடனை தொகுதியில் போட்டியிட்ட போதே அவர் மீதான சர்ச்சை ஆரம்பித்தது.

தொகுதிக்கு சம்பந்தமில்லாத சொந்த பந்தங்களை அந்த ஊருக்குள் அவர் வரவழைக்க, அதிமுகவினரின் எதிர்ப்பை சந்திக்க நேர்ந்தது. ’’இந்த வேலை எல்லாம் இங்கே வேண்டாம்..உங்களை ஜெயிக்க வைக்க வேண்டியது எங்கள் பொறுப்பு.. உங்க ஆளுங்களை ஊருக்கு போகச் சொல்லுங்க’’ என்று அன்பாக மிரட்டி அவர்களை ‘பேக்கப்’ செய்து வைத்தனர்.

இரட்டை இலையில் நின்று வென்ற அந்த தருணத்திலேயே அவரது ஆட்களின் ஆட்டம் ஆரம்பமானது. கோவில்பட்டியில் வைகோவை தாக்க முயன்றது, சென்னை ஓட்டலில் ரகளை என அவரது ஆட்கள் ‘தாதா’க்களாக உருவெடுக்க, இவர் ‘டான்’ ரேஞ்சில் வள்ளுவர் கோட்டம் ஆர்ப்பாட்டத்தில் அநாகரீகமாக நடந்து கொண்டிருக்கிறார். போலீசாரை விமர்சனம் செய்தது சாதாரண விஷயம். ஆனால், தேவை இன்றி நாடார் சமூகத்தை இழிவாக பேசி, வாழ்நாள் எதிர்ப்பை சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்.

அந்த சமூக  மக்கள் இந்த விவகாரத்தை சுலபமாக விட்டு விடப்போவதில்லை. வலிமை வாய்ந்த ஊடகங்கள் அவர்களிடம் உள்ளன. நெல்லை, குமரி, தூத்துக்குடி மட்டுமல்லாது சென்னையிலும் விரவி கிடக்கிறார்கள். 6 பிரிவுகளில் தொடரப்பட்டுள்ள  வழக்கை கருணாஸ் எதிர் கொள்ளலாம். விடுதலை ஆகலாம். ஆனால், தேவை இல்லாமல் பிற சமூகத்தினரின் எதிர்ப்பை சம்பாதித்து விட்டார். இது போன்ற பேச்சுக்கள் அவரது அரசியல் சகாப்தத்துக்கு மட்டுமல்லாது சினிமா வாழ்க்கைக்கும் உலை வைத்து விட்டது என்பதே உண்மை.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close